போலீஸ் மேல் காரை ஏத்திய மகா.. பதறி அடித்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்த சூர்யா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha kalyanam today episode November 03 : இன்றைய எபிசோடில் விஜய் மகாவுக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுக்கிறார். மகா பொறுமையாக கார் ஓட்டி சென்று கொண்டிருக்கும் பொழுது செகண்ட் கியர் போடப் போகும் போது போலீஸ்காரை வழிமறிக்க திடீரென்று பிரேக் போட முடியாமல் போலீஸ் மீது மகா காரை ஏற்றி விட்டார்.

உடனே அந்த எஸ்ஐ கான்ஸ்டபிள் இடம் சொல்லி மகாவையும் விஜயையும் ஸ்டேஷனில் வைத்திருக்கிறார்.. அடுத்து சூர்யா ஆபிசுக்கு போனதும் பவித்ராவை கூப்பிட்டு நக டிசைன் காண்பிக்க சொல்கிறார்.. அந்த டிசைன் எல்லாம் பார்த்துவிட்டு அன்னைக்கு நீ காண்பித்த டிசைன் நீ ரெடி பண்ணலயா அன்னைக்கு நல்லா இருந்தது ஆனா இந்த டிசைன் சரியில்ல..

அண்ணன்கள் மூஞ்சில் தண்ணியை ஊத்திய கோமதி.. ரொமான்ஸ் பண்ணும் செந்தில், மீனா – பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோட்

உனக்கு உதவிக்கு வேணும்னா யாரையாவது வச்சுக்கோ நல்ல டிசைன் கொண்டு வா என அனுப்புகிறார் அப்பொழுது போலீஸ் சூர்யாவிற்கு ஃபோன் பண்ணி உங்க வைஃப் மகாவும், தம்பி சூர்யாவையும் அரெஸ்ட் பண்ணி ஸ்டேஷனில் வைத்திருக்கோம் வாங்க என்று கூப்பிடுகிறார்.. அடுத்து ஐஸ்வர்யா பாட்டியிடம் கௌதம் என் மேல அன்பா இருக்க மாட்டேங்குறாரு, கல்யாணத்துக்கு முன்னாடி என்னென்னவோ பேசினாரு..

ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு ஹனிமூன் கூட அழைச்சிட்டு போகல என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது சித்ராதேவி கௌதமும் வருகின்றனர்.. சித்ராதேவி நீங்க தான் கல்யாணத்துக்கு முன்னாடியே சேர்ந்து ஊர் சுத்துனீங்களே அதுக்கப்புறம் என்ன உங்களுக்கு ஹனி மூணு கேக்குது என்கிறார் பிறகு பாட்டி உன் வயதில் இருக்கிறவங்க குழந்தையை நல்லபடியா பெத்தது..

காதல் ஜோடிக்கு ஆப்பு வைத்த ரசிகர்கள்.. இந்த வாரம் எலிமினேஷன் இவர்தானா?

அப்புறமா எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் என்கிறார். அடுத்து சூர்யா டென்ஷனாக ஸ்டேஷன்னுக்கு ஓடி வருகிறார் அங்கு மகா லேடி கான்ஸ்டபில் இடம் சமையல் பற்றி சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார் இன்னொரு பக்கம் விஜய்யும் ஜென்ஸ் கான்ஸ்டபில் இடம் கவிதை சொல்லி சிரித்து கொண்டிருக்கிறார்..

இதைப் பார்த்துவிட்டு பிறகு சூர்யா எஸ்ஐ இடம் சென்று நான் கமிஷனர் கிட்ட பேசிட்டேன் அவங்கள வெளியே விடுங்கள் என்று சொல்வதும் பிறகு எஸ்ஐ மகா மற்றும் விஜயை விட்டுவிட்டனர்.. அடுத்து சூர்யா ரெண்டு பேரையும் திட்டிவிட்டு வீட்டிற்கு போக சொல்கிறார் இதோட எபிசோடு முடிந்துள்ளது.