காதல் ஜோடிக்கு ஆப்பு வைத்த ரசிகர்கள்.. இந்த வாரம் எலிமினேஷன் இவர்தானா?

Bigg Boss season 7: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் மக்கள் மத்தியில் குறைவான ஓட்டுகளைப் பெற்று எலிமினேட் ஆக உள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த மாதம் 9 ஆண் போட்டியாளர்கள் 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேருடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.

இதில் முதல் வாரத்தின் இறுதியில் குறைவான வாக்குகளை பெற்ற அனன்யா ராவ் வெளியேறினார். இதற்கு மறு நாளே உடல்நிலை குறைவு காரணமாக பவா செல்லதுரை வெளியேறினார். அதன் பிறகு மூன்றாவது வார இறுதியில் விஜய் வர்மா எலிமினேட் செய்யப்பட்டார். நான்காவது வாரத்தில் 5 பேர் வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுத்ததால் இரண்டு பிக் பாஸ் போட்டியாளர்கள் வெளியேறினர்.

அண்ணாமலையின் பிடிவாதத்தால் மீனாவை வீட்டுக்கு அழைத்து வரும் முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அந்த வகையில் வினுஷா மற்றும் யுகேந்திரன் இருவரும் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் வைல்ட் கார்டில் கானா பாலா, அன்ன பாரதி, அர்ச்சனா, தினேஷ் மற்றும் பிராவோ ஆகியோர்கள் பிக் பாஸ் வீட்டில் களமிறங்கி இருக்கின்றனர்.

பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் அனைவரும் வைல்டு கார்டில் என்ட்ரி கொடுத்த ஐந்து பேரையும் டார்கெட் செய்து வருகிறார்கள். அப்படி வந்த முதல் வாரத்திலேயே நாமினேட் செய்யப்பட்ட உள்ளனர். அதோடு ஸ்மால் பாஸ் வீட்டிற்கும் அனுப்பப்பட்டுள்ளார்கள். இந்த சூழலில் இந்த வாரம் நாமினேஷனில் வைல்ட் கார்டில் ஐந்து பேரும் மேலும் மாயா, ஐஷூ, அக்ஷயா, மணி ஆகியோர்களும் சிக்கி உள்ளார்கள்.

என் வாழ்க்கையை சீரழித்தது அஜித் விஜய் பட இயக்குனரின் தம்பி தான்.! விரலை நீட்டி மாட்டி விட்ட நடிகை.!

இதில் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று ஐஷூ‌ பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவதாக கூறப்படுகிறது. இவருக்கு அடுத்ததாக அக்ஷயா, கானா பாலா, மற்றும் அன்ன பாரதி ஆகியோர்களும் அடுத்தடுத்து குறைவான வாக்குகளை பெற்றுள்ளார்கள். தற்பொழுது ஐஷூ தான் கடைசி இடத்தில் இருப்பதனால் இவர் வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.