விஜய்க்கு மகனாக நடிக்க லியோ படத்தில் மேத்யூ தாமஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Leo leo mathew thomas salary : நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்தார் இந்த திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக இந்த திரைப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வந்தது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்ததால் சமீபத்தில் சக்சஸ் மீட் வைத்து கொண்டாடினார்கள் சக்சஸ் மீட்டில் விஜய் பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது அது மட்டும் இல்லாமல் சக்சஸ் மீட்டில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒருத்தர் தான், கேப்டன் என்றால் அது ஒருத்தர் தான், தல என்றால் அது ஒருத்தர் தான் என பேசி இருந்தார்.

கரு கரு கருப்பாயி.. கருப்பு கலர் ட்ரெஸ்ஸில் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த வாணி போஜன்

இப்படி அனைவரையும் மதிக்கும்படியாக தளபதி விஜய் பேசியது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஏற்கனவே லியோ திரைப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் சம்பளம் விவரம் வெளியாகி வைரலாகி வந்தது இந்த நிலையில் விஜய்க்கு மகனாக லியோ திரைப்படத்தில் நடித்த தாமஸ் இந்த திரைப்படத்தில் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது.

தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும் சிஷ்யன்.! அலப்பறை கிளப்பும் லோகேஷ்

உலக அளவில் லியோ திரைப்படம் 553 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என பாக்ஸ் ஆபிஸ் வல்லுனர்கள் கூறி வருகிறார்கள் இந்த நிலையில் விஜய்க்கு மகனாக நடித்த மேத்யூ தாமஸ் மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இந்த நிலையில் லியோ திரைப்படத்தில் விஜய்க்கு மகனாக நடிக்க மேத்யூ தாமஸ் 30 முதல் 70 லட்சம் வரை சம்பளமாக வாங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.