விக்ரம் படத்தின் வசூலை முறியடித்த லியோ.! எங்கு தெரியுமா.? குஷியில் தளபதி ரசிகர்கள்

Leo : ரஜினிக்கு அடுத்து தமிழ் சினிமாவை தான் கண்ட்ரோலில் வைத்திருப்பவர் தளபதி விஜய். இவர் ஒரு படம் முடிந்த உடனேயே அடுத்த படத்தில் நடித்து வருகிறார் அப்படி வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து லியோ படத்தில் நடித்தார்.

300 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் பல தடைகளை தகர்த்து எறிந்து அக்டோபர் 19ஆம் தேதி வெளியானது படத்தின் கதை என்னவென்றால்.. ஆண்டனி தாஸ் தனது மகளையும், மகனையும் ஒரு பிரச்சனையின் போது கொன்றுவிடுகிறார் தனது மகன் லியோ தாஸ் இறந்துவிட்டதாக அவர் நினைத்துக் கொள்கிறார் ஆனால் நீண்ட வருடங்கள் கழித்து  காஷ்மீர் பக்கத்தில் பார்த்திபன் என்பவர் பிரபலமடைகிறார்.

துணிவு, வாரிசு போட்டி போட்டுச்சு.. அது மாதிரி லியோ படத்துக்கு நடந்திட கூடாதுன்னு பிளான் பண்ணினோம் – தயாரிப்பாளர் லலித்குமார்

அவருடைய புகைப்படம் இந்திய முழுவதும் பரவுகிறது இதை தாஸ் குடும்பம் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைகிறது காரணம் லியோ தாஸ் போலவே பார்த்திபன் இருக்கிறான் ஒருவேளை பெயரை மாற்றி அங்கு வாழ்கிறான் என இவர்கள் நினைத்து அங்கு போகின்றனர் அதன் பிறகு நடக்கும் ஆக்சன், எமோஷனல் தான் படத்தின் கதை..

இந்த மாதிரி கதையை மக்கள் அதிகம் பார்த்து உள்ளதால் லியோ திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் வசூலில் மட்டும் இதுவரை எந்த ஒரு குறையும் வைக்கவில்லை சுமார் 490 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக சொல்லபடுகிறது.

அப்பனுக்கு புள்ள தப்பாமா பிறந்து இருக்கியே… பாக்கியாவிடம் வசமாக மாட்டிய செழியன்.. பரபரப்பின் உச்சத்தில் பாக்கியலட்சுமி..

லியோ படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 182 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருக்கிறதாம். இதன் மூலம் பல ரெகார்டுகளை முறியடித்துள்ளது அப்படி லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தின் தமிழ்நாட்டு வசூலை லியோ திரைப்படம் முறியடித்திருப்பதாக கூறப்படுகிறது.