Leo : வெற்றி விழாவுக்கு போறீங்களா.? இத மறக்காம எடுத்துட்டு போயிடுங்க..

Leo : தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் இயகக்த்தில் உருவான லியோ திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்த நிலையில் பல தடைகளை தாண்டி அக்டோபர் 19ஆம் தேதி வெளியானது. விஜய் உடன் சேர்ந்து சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த்..

த்ரிஷா, ஜனனி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர். மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு படத்தை பார்த்தனர். லியோ படத்தின் கதை ஏற்கனவே நாம் பார்த்த கதை என்பதால் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் ரசிகர்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

மாடர்ன் ட்ரெஸ்ஸில் குட்டி தொப்பையை தூக்கி காட்டிய கீர்த்தி சுரேஷ்.!

அதனால் லியோ படத்தின் வசூலும் அடித்து நொறுக்கி வருகிறது. இதுவரை மட்டுமே 480 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகின்ற நாட்களிலும் படத்தின் வசூல் குறையாது என சொல்லப்படுகிறது. லியோ படம் எதிர்பார்த்த வசூலை அள்ளி உள்ளதால் லியோ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் டீம்..

வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி வெற்றி விழா கொண்டாட இருக்கிறது. சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது இந்த நிகழ்ச்சிக்கு மொத்தம் 6000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தீபாவளி ரேசில் இறங்கிய மூன்று டாப் ஹீரோக்களின் படங்கள்.! வெற்றி பெறுமா கார்த்தியின் ஜப்பான்..

இந்த நிகழ்ச்சியை நாளை நடைபெற இருப்பதால் இந்த விழாவில் கலந்து கொள்ள வருவர்களுக்கு சில அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளது அதாவது என்னவென்றால்.. லியோ படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்க ஆதார் அட்டை கட்டாயம் என அறிவிப்பு, விழாவுக்கான பாஸ் உடன் ஆதார் அட்டை நகல் எடுத்து வர வேண்டும் என கூறப்படுகிறது.