தீபாவளி ரேசில் இறங்கிய மூன்று டாப் ஹீரோக்களின் படங்கள்.! வெற்றி பெறுமா கார்த்தியின் ஜப்பான்..

Diwali Release Tamil Movie: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எப்பொழுதும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகுவது வழக்கம் அப்படி இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்ட இருக்கும் நிலையில் அனைவரும் குடும்பத்தினர்களுடன் செலவழிக்கும் நாளாக அமைகிறது. எனவே தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூன்று டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாக உள்ளது.

உதவி இயக்குனரின் பேச்சை நம்பி முழு கதையையும் தூக்கி எறிந்த பாக்யராஜ்..! கடைசியில வச்சான் பாரு ட்விஸ்ட்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: கடந்த 2014ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் ஜிகர்தண்டா. இப்படத்தின் இரண்டாவது பாகத்தை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற பெயரில் உருவாக்கி உள்ளார் கார்த்திக் சுப்ராஜ். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தனியாக ஸ்மைலுடன் நடந்து சென்ற சமந்தா.! நியூ லுக்கில் வைரலாகும் வீடியோ..

ஜப்பான்: ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜப்பான் திரைப்படம் வருகின்ற நவம்பர் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்க நகை கொள்ளைகளை அரங்கேற்றிய முருகனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

ரெய்டு: கார்த்திக் என்பவர் இயக்கி இருக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்துள்ளார் .மேலும் இவருக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்திருக்கும் ரெய்டு படம் வருகின்ற ராமர் 10ம் தேதி திரையரங்களில் வெளியாகிறது. இப்படத்தினை கனிஷ்க் மற்றும் ஜி மணிகண்டன் ஆகியோர்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.