தனியாக ஸ்மைலுடன் நடந்து சென்ற சமந்தா.! நியூ லுக்கில் வைரலாகும் வீடியோ..

Actress Samantha: நடிகை சமந்தா சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு மாறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மையோசிடிஸ் என்ற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா மிகவும் அவதிப்பட்டு வந்தார். எனவே ஏராளமான ரசிகர்கள் சமந்தா இந்த பிரச்சனையில் இருந்து சரியாகி மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்க வேண்டும் என சோசியல் மீடியாவில் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

அப்படி சமந்தா மீண்டும் தனது பழைய நிலைமைக்கு தற்பொழுது மாறி இருக்கிறார் என்பது தெரிந்துள்ளது. தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் நடித்து வரும் சமந்தா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அப்படி இவர் வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தொடரும் லியோ பஞ்சாயத்து.. லோகேஷ் மோசமான இயக்குனரா? வெற்றிமாறன் பேச்சால் கலாய்க்கும் ரசிகர்கள்..

இந்நிலையில் சமீபத்தில் விஜய் தேவர்கொண்டனுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டியது. மையோசிடிஸ் என்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா ஆறு மாதங்களுக்கு படங்களில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருந்தார்.

actress samantha
actress samantha

சமீபத்தில் அமெரிக்காவில் அவர் சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் அவருடைய புகைப்படங்களும், வீடியோக்களும் ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்தது. இதற்கிடையில் தற்பொழுது மும்பை விமான நிலையத்தில் நடிகை சமந்தா உற்சாகத்துடன் செல்லும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்களை கவர்ந்துள்ளது.

சூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு சாப்பாடு கூட போடல.. விஜய் பட நடிகர் பெஞ்சமினுக்கு நடந்த சோகம்.!

மஞ்சள் நிற குர்தா அணிந்து தனியாக ஜாலியாக சமந்தா நடந்து சென்றுள்ளார். மேலும் ரசிகர்களை பார்த்து ஸ்மைல் செய்துவிட்டு சென்றிருக்கும் இவருடைய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவ்வாறு அமெரிக்காவில் தனது நோய்க்கான சிகிச்சை முழுமையாக முடிந்தவுடன் மீண்டும் பழைய உற்சாகத்துடன் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.