உதவி இயக்குனரின் பேச்சை கேட்டு முழு கதையையும் தூக்கி எறிந்த பாக்யராஜ்..! கடைசியில வச்சான் பாரு ட்விஸ்ட்

Bhagyaraj : தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வெற்றி கண்டு வருபவர் பாக்யராஜ். இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். மொத்தத்தையும் கற்றுக் கொண்ட பிறகு இயக்குனர் அவதாரம் எடுத்தார் முதலில் சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

அதனை தொடர்ந்து இது நம்ம ஆளு, அவரச போலீஸ் 100, இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு, அந்த ஏழு நாட்கள், ஒரு கை ஒரு இசை, சுந்தரகாண்டம், தாவணி கனவுகள், முந்தானை முடிச்சு என வெற்றி படங்களை இவர் கொடுத்திருந்தாலும் இவருடைய சினிமாவில் மிகப்பெரிய ஹிட் படமாக பார்க்கப்பட்டது ராசுக்குட்டி.

இந்தப் படத்தை அவர் இயக்கி நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ராசுகுட்டி படம் எப்படி உருவானது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் டாப் இயக்குனராக வரும் பி. வாசு இயக்கிய அம்மா வந்தாச்சு படத்தில் பாக்யராஜ் நடித்து கொண்டு இருந்தாராம் அப்பொழுது உதவியகுனர்களை கூப்பிட்டு ஒரு கதை சொல்கிறேன் கேட்கிறீர்களா என கூற அவர்களும் ஆர்வமுடன் ஓகே என கூறினார்.

உடனே அன்று இரவு இரண்டு மணிக்கு இயக்குனர்களை வரவைத்து கதை சொல்லி இருக்கிறார் அந்த கதையை கேட்டுவிட்டு நந்தகுமார் என்பவர்  கதை சரியில்லை என தனக்கு தெரிந்ததை சொல்லி இருக்கிறார். பாக்யராஜும் சரி என்று கூறிவிட்டாராம் மறுநாள் நந்தகுமாரை சந்தித்த கலைமணி பாக்கியராஜ் நேத்து உங்களுக்கு சொன்ன கதையை தான் அவர் படமாக எடுக்க இருந்தார்.

நீ வேற சரியில்லைன்னு சொல்லிட்டியே என கூறி இருக்கிறார். சூட்டிங் முடிந்து சென்னை போன பாக்யராஜ் ஏற்கனவே சொன்ன கதையில் ஒரு கதாபாத்திரத்தை வைத்து ஒரு கதையை எழுதி இருக்கிறார். பின் அந்த நந்தகுமாரை அழைத்து இந்த கதையை படியுங்கள் என சொல்லி இருக்கிறார்.

அவரும் படித்துவிட்டு சூப்பராக இருக்கிறது என சொல்லி இருக்கிறார். அன்று தெரியாமல் சொல்லி விட்டேன் என நந்தகுமார் சொல்ல உன்ன மாதிரி இருக்கிற ஒரு லட்சம் பேருக்கும் பிடிக்காமல் தான் போகும் என கூறி இப்போ எழுதின அந்த ராசுக்குட்டி கதையை படமாக எடுத்தார் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.