இது கிரிக்கெட் போட்டி இல்ல வார்.. புதிய லுக்கில் தெறிக்கவிடும் தலைவர் – லால் சலாம் டீசர்

Lal Salaam : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார் அந்த வகையில் ஜெயிலர் படத்தை தொடர்ந்து  லால் சலாம், தலைவர் 170 மற்றும் தலைவர் 171 ஆகிய படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

இதில் முதலாவதாக லால் சலாம் படம் வெளிவர இருக்கிறது. ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா 3, வை ராஜா வை படங்களை தொடர்ந்து லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார் இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ், ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில், நிரோஷா ராதா,டைகர் கார்டன் தங்கதுரை..

பைனான்சியரிடம் பகைத்துக் கொண்டதால் கார் துடைக்கும் வேலைக்கு போன முத்து.. கண்கலங்கும் மீனா – சிறகடிக்க ஆசை ப்ரோமோ

மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் இந்த படத்தில் ரஜினி ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்து வந்த நிலையில் படத்திற்கான போஸ்டர்கள் வெளிவந்த நிலையில் அண்மையில் பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகும் என அதிரடியாக கூறியது.

அதனை தொடர்ந்து இன்று தீபாவளியை முன்னிட்டு லால் சலாம் படக்குழு டீசரை வெளியிட்டுள்ளது.. அதில் எடுத்த உடனேயே விக்ராந்த் மற்றும் விஷாலை காட்டுகின்றனர் அவரை தொடர்ந்து தம்பி ராமையா போன்றவரை காட்டுகின்றனர் கடைசியாக செம்ம மாஸான லுக்கில் வருகிறார்.

ஜுவல்லரி டிசைன் போட்டியில் ஜெயித்து சூர்யாவை பெருமைப்படுத்திய மகா.. ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

இந்த டீசரை வைத்து பார்க்கும் போது லால் சலாம் படம் ஆக்சன் மற்றும் எமோஷனல் கலந்த படமாக இருக்கும் என தெரிய வருகிறது நிச்சயம் படம் பெரிய ஹிட் அடிக்கும் என பலரும் கூறி கமெண்டு அடித்து வருகின்றனர். இதோ லால் சலாம் டீசரை நீங்களே பாருங்கள்.