பைனான்சியரிடம் பகைத்துக் கொண்டதால் கார் துடைக்கும் வேலைக்கு போன முத்து.. கண்கலங்கும் மீனா – சிறகடிக்க ஆசை ப்ரோமோ

Siragadikka Aasai serial promo november 12 : சிறகடிக்க ஆசை சீரியலில் தல தீபாவளிக்கு முத்துவும், மீனாவும் மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது பைனான்சியருடைய ஆள்கள் வந்து காரை வழிமறித்து அண்ணன் கார் எடுத்துட்டு வர சொன்னாரு என்று முத்து மீனாவை இறக்கி விட்டு விட்டு காரை எடுத்து சென்றனர்.

பிறகு முத்து பைனான்சியரிடம் போய் ஒரு வாரம் தான பணம் கட்டளை அதுக்குள்ள காரை தூக்கிட்டு போயிட்டீங்க என்று கேட்க பணத்தை கட்டிட்டு என் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுட்டு கார் எடுத்துட்டு போ என்று சொல்ல முத்து உன் காலில் விழவேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்ல நீ இல்லன்னா எனக்கு கார் கொடுக்க..

வசூல் வேட்டையாடும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம்.. 2 நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

ஆளா இல்லை என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இந்த நேரத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்துவும் மீனாவும் தல தீபாவளி முடிந்து மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளனர்.. அங்கு அண்ணாமலை போகும்போது காரில் போன இப்ப ஆட்டோவில் வந்திருக்கு..

கார் எங்க என்று கேட்க அதுவா பைனான்சியர் பொண்ணு ஊருக்கு வந்து இருக்காங்க அதனால அவரோட பொண்ண கூட்டிட்டு டூர் போயிருக்காருப்பா என முத்து பொய் சொல்கிறார்.. பிறகு வேலை தேடி முத்து அலைந்து கொண்டிருக்கிறார்.

வசூலில் மரண அடி வாங்கிய கார்த்தியின் ஜப்பான்.. 2 நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

அப்போது ஒருவர் கார் துடைக்கிற வேலை இருக்கு செய்ரியா என்று கேட்க எந்த வேலையா இருந்தாலும் பரவால்ல சார் செய்றேன் என்று அவர் வீட்டுக்கு போய் கார் துடைத்துக் கொண்டிருக்கிறார் இதை மீனா பார்த்து எமோஷனல் ஆகி கண்கலங்கும் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றன..