ஜுவல்லரி டிசைன் போட்டியில் ஜெயித்து சூர்யாவை பெருமைப்படுத்திய மகா.. ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha kalyanam serial November 12 promo : ஆஹா கல்யாணம் சீரியலில் சமீபத்தில் மகா அவங்க அப்பா, அம்மா வீட்டு பத்திரத்தை அட மானம் வைத்து வட்டிக்கு வாங்குன விஷயத்தை தெரிந்து கொண்டு நம்பலால் நம்ப அப்பா அம்மாவுக்கு எந்த ஒரு உதவியும் செய்ய முடியல என வருத்தப்படுகிறார்..

அந்த நேரத்தில் சூர்யா ஆபிசில் வேலை செய்யும் பவித்ராவிற்கு மகா அனுப்பிய டிசைனை சூர்யா பார்த்துவிட்டு இந்த டிசைன் ரொம்ப நல்லா இருக்கு அவங்கள நம்ம கம்பெனிக்கு வேலைக்கு வர சொல்றீங்களா என கேட்டிருந்தார்.. இது தெரிந்த மகாவும் இந்த வேலையில் நமக்கு காசு கிடைச்சா நம்ம அப்பா, அம்மாவுக்கு உதவி பண்ணலாமா என்று நினைத்து என்னால..

பைனான்சியரிடம் பகைத்துக் கொண்டதால் கார் துடைக்கும் வேலைக்கு போன முத்து.. கண்கலங்கும் மீனா – சிறகடிக்க ஆசை ப்ரோமோ

ஆபீஸுக்கு வந்து வேலை செய்ய முடியாது, ஆனால் வீட்டில் இருந்தே செஞ்சி தரேன் என்று மகா சொல்லியிருந்தார்.. அதேபோல் நைட்டு யாருக்கும் தெரியாமல் மகா நகை டிசைன் வரைந்து அதனை பவித்ராவிற்கு அனுப்பி வைத்து வேலை பார்க்கிறார்.. இதற்கு சூர்யாவும் சம்பளம் தரேன் என்று சொல்லியிருந்தார்.

இந்த நேரத்தில் ஆஹா கல்யாணம் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது அதில் மகா ஒரு ஜுவல்லரி டிசைன் போட்டியில் கலந்து கொண்டு முதலிடத்தை பிடித்திருக்கிறார் அந்த போட்டியின் நடுவர் இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக விபி ஜுவல்லரி எம்டி சூர்யா வந்திருக்கிறார் என்று சொல்வதும் மகா போச்சி போ என்று முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

வண்ண விளக்குகளுக்கு மத்தியில் தீபாவளி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட ராஷி கண்ணா..

பிறகு சூர்யா இந்த போட்டியின் வின்னர் மிஸ்ஸஸ் மகாலட்சுமி என்று சொல்வதும் மகா எழுந்து மேடைக்கு வருகிறார் மகாவை பார்த்து சூர்யா முழுசா நனைந்ததற்கு அப்புறம் முக்காடு எதற்கு கொஞ்சம் முக்காடை எடுக்கறீங்களா என்று மகாவிற்கு ஒரு சர்டிபிகேட் கொடுக்கிறார்.. பிறகு மேடையில் பேசிய மகா என் புருஷன் தான் எனக்கு ரொம்ப சப்போட்டா இருப்பார்..

என்னோட வெற்றிக்கு காரணம் என் புருஷன் தான் என்று சொல்லி இருந்தார்.. அடுத்து சூர்யா மகா இருவரும் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது எதுக்கு அங்க அப்படி சொன்ன என்று கேட்க நீங்க வேணா என்னை ஈசியா விட்டு குடுத்துருவீங்க ஆனா நான் உங்களை எங்கேயும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லும் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றன..