யாருக்கு யாரு போட்டி..? காக்கா கழகுக்கு ஒரேடியாக முற்றுப்புள்ளி வைத்த ரஜினி.!

நடிகர் ரஜினிகாந்த், விஜய்க்கும் தனக்கும் போட்டி என ரசிகர்கள் பேசி வருவது மிகவும் கவலை அளிப்பதாக கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை ஜெயிலர் திரைப்படத்திலிருந்து காக்கா கழுகு சர்ச்சை துரத்திக் கொண்டுதான் இருக்கிறது. விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய திரைப்படம் லால் சலாம். இந்த திரைப்படம் வருகின்ற ஒன்பதாம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அதேபோல் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெற்றது.

கோபால் இவ்ளோ நாள் பழகியதெல்லாம் பொய்யா..! திருமண பேச்சை எடுத்ததும் நோஸ்கட் பண்ணிய நடிகர்.. மாடு வேலிய மேஞ்சிடுச்சு

மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, இயக்குனர் ரவிக்குமார் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கே எஸ் ரவிக்குமார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என பேசினார். அதற்காக தன்னுடைய திரைப்படத்தில் அரசியல் வசனம் வைத்ததாக கூறினார். மதுரையை சேர்ந்த விஜய ராஜ், விஜயகாந்தாக மாறுவதற்கு உறுதுணையாக இருந்தது ரஜினிகாந்த் தான் என் தம்பி ராமையா கூறினார்.

அதேபோல் அந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா தன்னுடைய தந்தை ரஜினிகாந்தை சங்கி என்று பலரும் பேசுவதாக கூறினார் .ஆனால் தன்னுடைய தந்தை ரஜினி சங்கி இல்லை என்று கூறிய ஐஸ்வர்யா அவர் ஒரு சிறந்த மனித நேயவாதி அவர் சங்கியாக இருந்தால் லால் சலாம் திரைப்படத்தில் மொய்தின் பாயாக நடித்திருக்க மாட்டார் என தெரிவித்தார். இதனால் ரஜினி கண் கலங்கினார்.

லிவிங்ஸ்டன் மகள் இந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா.! இணையத்தில் வைரலாகும் குடும்ப புகைப்படம்.

இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய ரஜினிகாந்த் ஜெயிலர் வெளியீட்டு விழாவில் தான் சொன்ன காக்கா கழுகு கதையை விஜயை தாக்கி பேசியதாக பல நினைத்துக் கொண்டுள்ளதாகவும் அது தன்னை வேதனடைய செய்தது என கவலையாக கூறினார். நான் எப்பொழுதும் விஜய்யின் நலன் விரும்பி என்று கூறிய ரஜினி. விஜயை நான் போட்டியாக கருதினால் எனக்கு மரியாதை இருக்காது என்றும் அதேபோல் விஜய் என்னை போட்டியாக நினைத்தால் அவருக்கு மரியாதை இல்லாமல் போய்விடும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் விஜய் அரசியலுக்கு வரும் நோக்கத்தை குறிப்பிட்ட ரஜினி அதற்கு அவருக்கு வாழ்த்தும் கூறியுள்ளார் இந்த காக்கா கழுகு கதையை ரசிகர்களை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரஜினி.