KH 234 Update : 8 வருடங்களுக்குப் பிறகு கமலுடன் இணையும் முன்னணி நடிகை.! லிப்லாக் இருக்குமே..

Trisha : உலக நாயகன் கமலஹாசன் இளம் வயதிலிருந்து இப்பொழுது வரையிலும் படங்களில் நடித்து வருகிறார் இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பல பரிமாணங்களில் சினிமாவில் பணியாற்றி வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது.

அதனை தொடர்ந்து கமலஹாசனுக்கு பட வாய்ப்புகள் குதிந்த வண்ணமே இருக்கிறது. 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதிரடியாக உருவாகி வருகிறது கமலும் தீவிரமாக நெடித்து வருகிறார் அண்மையில் கூட intro வீடியோ வெளிவந்து பட்டையை கிளப்பியது.

பழிவாங்கும் மாயா.. சில்லறையை செதரவிட்ட அர்ச்சனா.! ஆச்சரியத்தில் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்கள்

அடுத்து ஹச். வினோத் உடன் ஒரு படம், லோகேஷ் கனகராஜ் உடன் ஒரு படம், மணிரத்தினத்துடன் ஒரு படம் மேலும் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் கல்கி திரைப்படத்தில் கமல் வில்லனாகவும் நடிக்க இருக்கிறார் இப்படி திரையில் பிஸியாக ஓடும் கமல் மற்றொரு பக்கம் அரசியல், சின்னத்திரை போன்றவற்றிலும் தன்னை வெளிகாட்டிக்கொண்டு வருகிறார்.

இதனால் நிற்க கூட நேரமில்லாமல் கமல் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படிப்பட்ட கமல் மணிரத்தினத்துடன் கைகோர்த்து தனது 234 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் அதற்கான அறிவிப்பு வெளியாகிய நிலையில் இன்று டைட்டில் அன்னவுன்ஸ்மென்ட் மாலை 5 மணிக்கு வெளிவர உள்ளது.

இலங்கையில் யாருக்கு வெற்றி.. ஜெயிலர், லியோ இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

இந்த நிலையில் நடிகை த்ரிஷா தனது instagram பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு தான் கமலின் 234 வது படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் 8 வருடங்களுக்குப் பிறகு கமலுடன் நீங்கள் நடிக்க போகிறீர்கள் ரொம்ப எதிர்பார்ப்போடு இருக்கிறோம் என கூறி வருகின்றனர்.

Trisha
Trisha