பழிவாங்கும் மாயா.. சில்லறையை செதரவிட்ட அர்ச்சனா.! ஆச்சரியத்தில் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்கள்

Bigg Boss season 7 Tamil today promo 3: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. சுவாரசியமான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வந்த இந்நிகழ்ச்சியில் ரெக்கார்டு கொடுத்து பிரதீப் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பது மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் டைட்டிலை பிரதீப் தான் வெல்வார் என்று அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்து வந்தனர் ஆனால் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்கள் பலரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, தவறாக பேசுகிறார், பயமாக இருக்கிறது என பல காரணங்களை கூறி ரெட் கார்டு கொடுத்து அனுப்பி வைத்துள்ளார்கள்.

இலங்கையில் யாருக்கு வெற்றி.. ஜெயிலர், லியோ இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

எனவே இதனை அடுத்து மாயா இந்த வார கேப்டன் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனால் அவருடைய ஆட்டம் மேலும் அதிகமாகி ஆணவத்தின் உச்சத்தில் இருக்கிறார் என்பது தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தெரியவந்துள்ளது. இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டில் போன வாரம் இருந்த தினேஷ், அர்ச்சனா, விசித்ரா ஆகியோர்களுடன் கூல் சுரேஷ், மணி, ரவீனா ஆகியோர்களும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

மாயா தொடர்ந்து ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களை அதிக வேலை வாங்க வேண்டும் என்ற முடிவில் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் மூன்றாவது ப்ரோமோவில் மாயா சக போட்டியாளர்களிடம் இப்ப பாரு நான் எப்படி அர்ச்சனாவ வேலை வாங்குரன்னு என சொல்ல மாயாவிடம் நீங்க எல்லாம் உருட்டுறதை விடவா உருட்டிகிட்டு இருக்க எல்லாருடைய லைஃப்லையும் விளையாடிக்கிட்டு இருக்கீங்க நான் இன்னும் ரெஸ்ட்ரூம் கூட போகல இவங்க ஏதாச்சும் சொல்லுவாங்கனு  இங்கேயே வேலை செஞ்சுகிட்டு இருக்க இந்த டார்ச்சர் என்னால அனுபவிக்க முடியாது மேம்.

Leo : வெற்றி விழா முடிஞ்சிடுச்சு.. அடுத்து பார்ட்டி..! எங்கு தெரியுமா.?

பில்லு எங்க பாக்கணும் அப்போ இவங்கள கேள்வியே கேட்க கூடாதா யாரும், இவங்க தலைமையில நடக்குதா இந்த வீடு என மிகவும் கோபத்துடன் தன்னுடைய கருத்துக்களை முன்வைக்க ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். ஆனால் மாயா, ஜோவிகா போன்றவர்கள் நக்கலாகவும் சிரித்து கொண்டிருக்கிறார்கள்.