யாஷ் படத்தை இயக்கப் போவது சத்யராஜ் பட குழந்தை நட்சத்திரமா.! ஷாக்கில் ரசிகர்கள்..

Actor yash: கே.ஜி.எஃப் படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த நடிகர் யாஷ் தொடர்ந்து தரமான கதை அம்சமுள்ள படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது பிரபல இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் அந்தப் படத்தின் இயக்கப் போவது சத்யராஜ் பட குழந்தை என தகவல் கிடைத்துள்ளது.

கே.ஜி.எஃப் படத்தின் வெற்றிக்கு பிறகு யாஷ் நடிக்க இருக்கும் படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் தகவலின் படி யாஷ் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் கீது மோகன் தாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ச்சனாவை ரவுண்டு கட்டிய ஹவுஸ் மெட்ஸ்கள்.! ஒருத்தவங்களோட வீக்னஸ் தெரிஞ்சுக்கிட்டு அதை குத்தி குத்தி காட்டுறது தான் உங்களோடைய பொழப்பே..

மலையாள படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் தான் இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் 1988ஆம் ஆண்டு இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை பெற்ற பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் சத்யராஜ், சுகாசினி, ரேகா, ரகுவரன் ஆகியோர்கள் நடித்திருந்தனர்.

இதில் சத்யராஜ் மற்றும் சுகாசினி தம்பதி தத்தெடுத்து வளர்க்கும் குழந்தை கேரக்டரில் நடித்திருந்தவர் தான் கீது மோகன் தாஸ். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் உலகநாயகன் தயாரித்து நடிகர் மாதவன் நடித்திருந்த நளதமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவ்வாறு இவர்தான் யாஷின் அடுத்த படத்தினை மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்க இருக்கிறார் என்பது குறித்து தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் ஆச்சரியமடைந்து வருகின்றனர்.

தொப்புள் குழியில் பம்பரத்தை சுத்தவிட்ட சுகன்யாவின் மறுபக்கம்.. வெளியே சொன்ன பிரபலம்

மேலும் இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி 2025ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமான அப்டேட்டையும் படக் குழு வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து நடிகை சாய் பல்லவி இந்த படத்தில் இணைந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.