சப்ப விஷயத்துக்கு சண்டை போட்ட பிரதீப் ஆண்டனி.. 10 வருட நட்பு குறித்து பேசிய கவின்

Pradeep Antony anதமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் ரெட் கார்ட் பெற்று வெளியேறியவர் பிரதீப் ஆண்டனி.. இவர் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பிக்பாஸ் டைட்டிலை வென்றே ஆக வேண்டும் என்ற குறிக்கோளோடு உள்ள வந்தவர். ஆனால் மற்ற சிலர் போட்டியாளர்களுடன் இவருக்கு பல்வேறு வாக்குவாதங்கள் இருந்தன..

அதனால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மாயா, பூர்ணிமா, ஐசு, ஜோவிகா போன்ற சில போட்டியாளர்கள் சேர்ந்து பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விட்டனர்.. இருந்தும் இவர்களது கருத்து தப்பு என ரசிகர்கள் பலரும் பிரதீப்பிற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.. அதுமட்டுமில்லாமல் முந்தைய பிக்பாஸ் பிரபலங்களான கவின், சினேகன்..

சர்ச்சைகளுக்கு மத்தியில் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் நடிகர் ஜெயம் ரவி.! என்ன காரணம் தெரியுமா.?

சனம் ஷெட்டி போன்ற சில போட்டியாளர்களும் பிரதீப்பிற்கு சப்போர்ட் பண்ணினர்.. நடிகர் கவின் மற்றும் பிரதீப் இருவரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள்.. இவர்களது பள்ளி, கல்லூரி வாழ்க்கை மற்றும் திரைத்துறை வாழ்க்கை என எல்லாவற்றிலும் ஒன்றாக பயணித்து வந்திருக்கின்றனர்..

கடைசியாக கூட கவின் ஹீரோவாக நடித்த வெளிவந்த டாடா திரைப்படத்தில் பிரதீப் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார்..  இந்த நிலையில் பிரதீப் மற்றும் கவின் இருவரும் சேர்ந்து கொடுத்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வைரலாகி வருகின்றது.. அதில் கவின் பிரதீப் குறித்து பல்வேறு விஷயங்களை சொல்லி இருக்கிறார்.. அது என்னவென்று பார்ப்போம்..

அடுத்த அனுஷ்கா நீ தான்.. உடல் எடையை ஏத்தி ஆளே மாறிப்போன கேத்தரின் தெரசா -ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்த புகைப்படம்

எனக்கு ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது அப்பொழுது பிரதீப் உள்ளிட்ட சில நண்பர்கள் சேர்ந்து தான் என்னை காப்பாற்றினர்.. மேலும் பேசிய அவர் நானும், பிரதீபும் நிறைய சண்டை போட்டு இருக்கோம் சப்ப விஷயத்துக்கெல்லாம் சண்டை போட்டு அழுது இருக்கோம்.. பப்ஜியில் ரிவைவ் செய்ய முடியவில்லை என்பதால் கூட நாங்கள் சண்டை போட்டு இருக்கோம் என்று அவர் சொல்லிய இந்த வீடியோவை ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.