365 நாட்கள் ஓடிய கரகாட்டக்காரன் வசூல் எவ்வளவு தெரியுமா.! அடேங்கப்பா அப்பவே இத்தனை கோடியா.?

karakattakkaran : கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா நடிப்பில், இளையராஜா இசையில் வெளியாகிய திரைப்படம் தான் கரகாட்டக்காரன் இந்தத் திரைப்படம் 1989 ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி வெளியானது. அப்பொழுதைய காலகட்டத்தில் நகைச்சுவை கலந்த காதல் கதை, இரு கரகாட்ட கலைஞர்களின் காதலை மையமாக வைத்து கோர்வையான திரைக்கதையில் உருவான நகைச்சுவை திரைப்படம் தான் இது.

இன்று தொலைக்காட்சியில் கரகாட்டக்காரன் திரைப்படத்தை திரையிட்டால் ரசிகர்கள் பலரும் விரும்பி பார்ப்பார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் ராமராஜன், கனகாவை தொடர்ந்து சந்தன பாரதி, சந்திரசேகர், சண்முகசுந்தரம், காந்திமதி, கவுண்டமணி, செந்தில் கோவை சரளா, ஜூனியர் பாலையா, என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.

நீ ஒருத்தன் அழுதா போதுமாடா.. வடிவேலுவை கதறவிட்ட சிவாஜி.! படபிடிப்பு தளத்தில் நடந்த உண்மை சம்பவம்

இந்த திரைப்படம் 35 லட்சம் ரூபாயில் தயாரானது. அதேபோல் இந்த திரைப்படம் 365 நாட்கள் ஒரே திரையரங்கில்  ஓடியது அதேபோல் மற்ற திரையரங்கில் 485 நாட்கள் வரை ஓடியது அதற்குக் காரணம் தில்லானா மோகனாம்பாள் கதையை இன்னும் எளிய மக்களிடம் போய் சேருமாறு கங்கை அமரன் செய்திருந்தார் கோர்வையாக அமைக்கப்பட்ட திரைக்கதை இளையராஜாவின் அற்புதமான கிராமப்புற பாடல்கள் என அனைத்தும் மக்களிடையே போய் சேர்ந்தது.

மாங்குயிலே பூங்குயிலே, முந்தி முந்தி, இந்த மான், ஊரு விட்டு ஊரு வந்து, குடகு மலை காற்று என அனைத்து பாடலும் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்தது அதேபோல் எத்தனை வருடங்கள் ஆனாலும் அழியா வரம் பெற்ற வாழைப்பழ காமெடி சொப்பன சுந்தரி காமெடி  மக்களிடையே மிகவும் பிரபலம். இப்படி கரகாட்டகாரன்  திரைப்படத்தை புகழ்ந்து கொண்டே போகலாம்.

நீ ஒருத்தன் அழுதா போதுமாடா.. வடிவேலுவை கதறவிட்ட சிவாஜி.! படபிடிப்பு தளத்தில் நடந்த உண்மை சம்பவம்

இந்த நிலையில் கரகாட்டக்காரன் திரைப்படம் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது அப்பொழுதைய காலகட்டத்திலேயே நான்கு முதல் ஐந்து கோடி வரை வசூல் அள்ளியது என மிகவும் பரபரப்பாக பேசினார்கள். அதேபோல் மதுரை திரையரங்கில் தான் 365 நாட்கள் ஓடி ஹிமாலய சாதனை பெற்றது. மேலும் ராமராஜன் திரை வாழ்க்கையில் இந்த திரைப்படம் மிக முக்கிய திரைப்படமாகவும் அமைந்தது.