நீ ஒருத்தன் அழுதா போதுமாடா.. வடிவேலுவை கதறவிட்ட சிவாஜி.! படபிடிப்பு தளத்தில் நடந்த உண்மை சம்பவம்

Vadivelu : 60, 70 களில் நடிப்பு அரக்கனாக வலம் வந்தவர் சிவாஜி. ஒரு கட்டத்தில் வயது முதிர்வின் காரணமாக ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கு அப்பா, சித்தப்பா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் அப்படி 1992 ஆம் ஆண்டு கமல், சிவாஜி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தேவர்மகன்.

இவர்களுடன் இணைந்து கௌதமி, ரேவதி, நாசர், காகா ராதாகிருஷ்ணன், வடிவேலு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். படம் அதிரடி ஆக்சன், காமெடி, எமோஷனல் என் அனைத்தும் இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் படத்தை போட்டி போட்டுக் கொண்டு பார்த்தனர் அதனால் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

நெஞ்சை பதபதைக்க வைக்கும் அருள்நிதியின் டிமான்டி காலனி 2 ட்ரைலர்.! அல்லுவிடபோகும் திரையரங்கம்

தேவர்மகன் படத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துள்ளதாம். அது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வடிவேலு வெளிப்படையாக சொல்லி உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. தேவர் மகன் படம் நான் சினிமாவுக்கு வந்த புதுசு.. அப்ப சூப்பரா நடிக்கணும்னு ஓவர் ஆக்சன் பண்ணிடுவேன்.

அந்த படத்தில்  அப்பா சிவாஜி இறந்து போய்விடுவார் பக்கத்தில் குழந்தைகள் கால் மடியில் நானும் சங்கிலி முருகனும் இருப்போம்.. கமல் சார் கொஞ்சம் தூரத்திலிருந்து ஓடி வருவார் எல்லோரும் சேர்ந்து அழனும் கமல் சார் என்னிடம் தத்ரூபமா அழனும்னு சொல்லுவார்.

அதிக சம்பளம் வாங்கினால் சிறந்த நடிகர் என்று அர்த்தம் இல்லை.? விஜயை தாக்கி பேசிய பீஸ்ட் பட நடிகர்

சாட் ரெடின்னு சொன்னாங்க உடனே நான் ஐயா எங்களை விட்டுட்டு போயிட்டீங்களே ஐயா -ன்னு கத்தி அழ ஆரம்பிச்சிட்டேன். கொஞ்ச நேரம் கூட ஆகல கட் கட் -னு சொன்னதும் பிணம்.. சிவாஜி சார் என்னை பார்த்து  இங்க வாடா.. நானும் பயந்து அவர் பக்கத்தில் போனேன் நீ ஒருத்தன் அழுதா போதுமாடா மத்தவன் யாரும் அழ வேண்டாமா.? என் மகனா வர்ற கதாநாயகனே மெதுவா தான் அழறான் நீ ஏன்டா ஊரையே கூட்டுற..

நீ கத்துற காத்துல உன் உசுரும் போயிடும்னு சொன்னாரு.. அது மட்டும் இல்ல துண்டை வாயில் வைத்துக்கொண்டு கம்முனு விசும்பி  அழு.. அது போதும் ஓவர் ஆக்சன் பண்ணா உதை போடுவேன் என சொன்னார் அதை இப்ப நினைச்சாலும் எனக்கு சிரிப்பு வருது என கூறி உள்ளார் வடிவேலு.