விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் வெங்கட் பிரபு.. தளபதி 68 எப்போ ரிலீஸ் தெரியுமா.?

Thalapathy 68 : சினிமா உலகில் போட்டிகள் இருந்து கொண்டே இருக்கும் அந்த வகையில் எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல் தொடங்கிய இப்பொழுது ரஜினி – விஜய் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றனர் இந்த ஆண்டு வெளியான ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்ததை தொடர்ந்து விஜய் லியோ திரைப்படம் வெளிவந்து சரிக்கு சமமாக வசூல் அள்ளியது.

இதனை தொடர்ந்து ரஜினி ஒரு பக்கம் லால் சலாம்,  வேட்டையன் தலைவர் 171 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் மறுபக்கம் விஜய் தளபதி 68 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து பிரபு தேவா, பிரசாந்த், மைக் மோகன், மீனாட்சி சௌத்திரி, சினேகா, லைலா, விடிவி கணேஷ், அஜ்மல் அமீர், அரவிந்த் ஆகாஷ்..

நீ ஒருத்தன் அழுதா போதுமாடா.. வடிவேலுவை கதறவிட்ட சிவாஜி.! படபிடிப்பு தளத்தில் நடந்த உண்மை சம்பவம்

யோகி பாபு, பிரேம்ஜி கங்கை அமரன் என மிகப் பெரிய திரை பட்டாளமே நடிக்கிறது படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்ட பொருட்ச அளவில் தயாரித்து வருகிறது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

படம் டைம் டிராவல் சம்பந்தப்பட்ட படமாக இருப்பதால் விஜய் இதில் இளமையான தோற்றத்தில் நடிக்கஉள்ளார் என்பது கூடுதல் தகவல்.. இப்படி இருக்கின்ற நிலையில் வருகின்ற புத்தாண்டு தினத்தை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என சொல்லப்படுகிறது இந்த நிலையில் தளபதி 68 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

நெஞ்சை பதபதைக்க வைக்கும் அருள்நிதியின் டிமான்டி காலனி 2 ட்ரைலர்.! அல்லுவிடபோகும் திரையரங்கம்

தளபதி 68 படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வரும் என கூறப்பட்டு வந்து நிலையில் அதற்கு முன்பாகவே விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22 ஆம் தேதி வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. அப்படி நடந்தால் விஜய் ரசிகர்களுக்கு விஜய் பிறந்தநாள் மற்றும் தளபதி 68 சேர்ந்து டபுள் ட்ரீட் ஆக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை..