ஏன் டா தயாரித்தோம் என முக்காடு போட்டு மூலையில் உட்காரவைத்த கமலின் 4 படங்கள்.!

Kamal Haasan: ஹீரோவாக அறிமுகமான கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் நிலையில் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோவாக கலக்கி வரும் கமல்ஹாசன் பன்முக திறமைகளை கொண்டவராக விளங்குகிறார்.

அப்படி இவருடைய தயாரிப்பில் வெளியாகி தோல்வியை பெற்ற நான்கு திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். கமல்ஹாசன் தொடர்ந்து தனது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

என்னது விஜயகாந்த் ஹீரோவா என்னால் நடிக்க முடியாது.. என் கேரியர் அவ்வளவுதான் எனத் தெரித்து ஓடிய 5 நடிகைகள்..

விருமாண்டி: கமல்-அபிராமி நடிப்பில் வெளியான விருமாண்டி திரைப்படம் ரிலீஸ் ஆன காலகட்டத்தில் சுமாரான வெற்றினை மட்டுமே கண்டது. ஆனால் தற்பொழுது இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

ஹே ராம்: 2000ஆம் ஆண்டு வெளியான காமெடி திரில்லர் படம் தான் ஹே ராம் இந்த படத்தில் டயலாக் இயக்கம் என அனைத்தையும் கமல்ஹாசன் தான் செய்திருந்தார் இந்த படம் படும் தோல்வியை சந்தித்தது.

உத்தம வில்லன்: கமல் நடிப்பில் ட்ராமா திரில்லர் படமாக உருவான உத்தம வில்லன் படம் நல்ல கதையம்சத்துடன் இருந்தாலும் ரசிகர்களை பெரிதளவிலும் கவரவில்லை எனவே இப்படமும் அண்டர் ப்ளாப் ஆனது.

ஸ்ருதியின் பணதிமிருக்கு முடிவுகட்டிய முத்து.! இனிதான் இருக்கு மீனாவின் ஆட்டமே – சிறகடிக்க ஆசை எபிசொட்

மும்பை எக்ஸ்பிரஸ்: காமெடி கலாட்டா உடன் 2005ஆம் ஆண்டு வெளியான மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் கமல் காமெடி நடிகராக கலக்கியிருந்தார். இப்படமும் தோல்வியை சந்தித்தது. அனால் இந்த திரைப்படங்கள் அனைத்தும் தற்பொழுது OTT யில் கொண்டாடப்பட்டு வருகிறது .

இவ்வாறு ஆரம்ப காலகட்டத்தில் தனது படங்களை தயாரித்து வந்த கமல் தற்பொழுது சிவகார்த்திகேயன், சிம்பு போன்ற நடிகர்களின் திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான அப்டேட் தொடர்ந்து வெளியாகி வருவதை பார்க்க முடிகிறது.