இளமை இதோ.. இதோ.. பாடலில் கமல் பயன்படுத்திய புல்லட்.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஏ.வி.எம் நிறுவனம்

Kamal Haasan Birthday Special: உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஏ.வி.எம் நிறுவனம் கமலின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தொடர்ந்து கமலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏராளமான அப்டேட்டுகள் வெளியாகி வரும் நிலையில் மணிரத்தினம், கமல் இணைந்திருக்கும் படத்திற்கு :தக் லைஃப்’ என பெயர் வைத்துள்ளனர். இதனை அடுத்து இரு தினங்களுக்கு முன்பு இந்தியன் 2 படத்தின் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

உங்க புள்ளைக்கே சப்போர்ட் பண்ணுங்க பாக்கியாவை கிழித்து தொங்கவிட்ட ஜெனி.. மாலினியால் உடையும் குடும்பம் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

இவ்வாறு கமல் தற்பொழுது சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக இருந்து வந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்விகளை சந்தித்து இருக்கிறார். அப்படி சகலகலா வல்லவன் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து முன்னணி நடிகர்களான அந்தஸ்தை பிடித்தார்.

kamal haasan
kamal haasan

கமல் நடிப்பில் 1989ஆம் ஆண்டு வெளியான சகலகலா வல்லவன் திரைப்படத்தின் இயக்குனர் எஸ்.பி முத்துராமன் இயக்க அம்பிகா, துளசி, ரவீந்திரன், தேங்காய் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். இப்படத்தில் இளமை இதோ.. இதோ.. என்ற பாடலுக்கு இளையராஜா இசையமைத்தார்.

கமலின் ‘Thug Life’ இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா? ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே வந்த பிரச்சனை..

தற்போது வரையிலும் இளமை இதோ.. இதோ.. பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நடிகர் கமல்ஹாசனுக்கு அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ.வி.எம் நிறுவனம் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

kamal haasan
kamal haasan

அதாவது இளமை இதோ.. இதோ.. பாடலில் கமல் பயன்படுத்திய 1980ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட புல்லட் பைக்கை நாளை முதல் ரசிகர்கள் பார்வைக்கு வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.வி.எம் நிறுவனம் சமூக வலைதள பக்கத்தில் உலகநாயகன் கமலஹாசனின் பிறந்தநாள் பரிசாக இளமை இதோ.. இதோ.. பாடலில் கமல்ஹாசன் பயன்படுத்திய 1980ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட புல்லட் பைக்கை நாளை ஏ.வி.எம் மியூசியத்தில் ரசிகர்கள் பார்வைக்கு வைக்க உள்ளோம் ரசிகர்கள் வந்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளனர்.

kamal haasan
kamal haasan