போட்டி போட்டு ஜெயிக்கிற சுகமே தனி தான்.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் 5 நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

Jigarthanda DoubleX : ஹாலிவுட்டில்  தான் ஒரு படம் ஹிட் அடித்துவிட்டால் பார்ட் 2 , பார்ட் 3 என போய்க்கொண்டே இருக்கும் அதுபோல தமிழ் சினிமாவிலும் தற்பொழுது பார்ட் 2 படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிங்கம் 2, காஞ்சனா 2, பொன்னியின் செல்வன் 2 ஆகியவற்றை தொடர்ந்து கைதி 2, லியோ 2..

சர்தார் 2 என அடுத்தடுத்த பாகங்களும் வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா பெரிய ஹிட் அடித்த நிலையில் சில வருடங்கள் கழித்து தற்பொழுது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் அதாவது ஜிகர்தண்டா பார்ட் 2 வெளியானது.

தினேஷ்க்கு கொடுக்கப்பட்ட சீக்ரெட் டாஸ்க்.. பொங்கி எழும் அமுல் பேபி.! மாயாவின் முகத்திரை கிழிந்தது

படத்தில் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், நிமிஷ சஜயன், சைன் டாம் சாக்கோ, பாவா செல்லதுரை.. இளவரசு, அரவிந்த் ஆகாஷ், சத்யன் என பலரும் நடித்திருந்தனர் படம் எதிர்பார்த்ததை விட ஆக்சன், எமோஷனல், காமெடி என அனைத்தும் இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே  நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளியாகி இத்துடன் 5 நாட்களாகிய நிலையில் இதுவரை எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

நல்ல கதை, மோசமான கதை சொல்றவனுக்கும் உள்ள வித்தியாசமே இதுதான்.. லோகேஷ் – விஜயை மறைமுகமாக தாக்கினாரா கோபி நயினார்

அதன்படி பார்க்கையில் உலகம் எங்கும் சுமார் 37 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெகு விரைவிலேயே ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் 50 கோடியை தொட்டு சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்  பட குழுவினர் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.