தினேஷ்க்கு கொடுக்கப்பட்ட சீக்ரெட் டாஸ்க்.. பொங்கி எழும் அமுல் பேபி.! மாயாவின் முகத்திரை கிழிந்தது

Bigg Boss season 7 Tamil today promo 1: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் கமல்ஹாசன் சூனியக்காரி மாயா மற்றும் பூர்ணிமாவின் செயல்களை பார்த்துவிட்டு எச்சரித்த நிலையில் அதன் பிறகு இருவரும் நல்லவர்கள் போல் நடித்து வந்தனர். அதோடு மட்டுமல்லாமல் மாயா ஒரு சில இடங்களில் தன்னுடைய விஷத்தை கக்கி வந்தாலும் பூர்ணிமா அதனை திருத்தி வருகிறார்.

இவ்வாறு இவர்கள் நல்லவர்களாக இருக்க முயற்சித்தாலும் தற்பொழுது மாயாவின் முகத்திரை கிழிந்துள்ளது. நாளுக்கு நாள் ஹவுஸ் மெட்ஸ்களுக்கு புதிய டாஸ்கை கொடுத்து வருகிறார் பிக் பாஸ். இந்த வாரம் கேப்டன் ஆன தினேஷ் தனது கேப்டன்சியில் எந்த தவறும் நடந்து விடக்கூடாது என கவனமாக இருக்கிறார்.

முதல் பரிசை வென்றும் கொண்டாட முடியாமல் தவிக்கும் மகா.. ஆச்சரியப்பட்ட சூர்யா – பரபரப்பான கட்டத்தில் ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

இதனால் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல மவுசு இருந்து வருகிறது. இவ்வாறு தினேஷ் கேப்டனாக இருப்பது வீட்டில் இருக்கும் ஏஜென்ட் டீமுக்கு பிடிக்கவில்லை. எனவே கிடைக்கும் நேரத்தில் தினேஷிடம் சண்டை போடுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறனர்.

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் இன்றைய முதல் ப்ரோமோவில் தினேஷை பிக் பாஸ் அழைத்து சீக்ரெட் டாஸ்க் எனக் கூறுகிறார். வெளியில் வந்த தினேஷ் ஹவுஸ் மேட்ஸ்களிடம் பெரிய சரக்கு ஒன்னும் வரல அதனாலதான் தனியா சோலோ சோலோ என்று கூப்பிடுகிறார் என கூறுகிறார்.

பண்றேன் பண்றேன்னு சொல்லிட்டு யாரு ஒன்னும் பண்ணல என சொல்ல இதனால் கடுப்பான விஷ்ணு முதல்ல நீ கேரக்டருக்குள்ள வா எனக் கூற இதற்கு தினேஷ் முதல்ல நீ உன்னுடைய கேரக்டர் நல்லா நடிப்பா என்று சொல்ல இதனால் வாக்குவாதம் முத்துகிறது.

லியோ, ஜெயிலர்.. 500 கோடி, 600 கோடின்னு சொல்றாங்க இதெல்லாம் உண்மையா.? கொளுத்தி போட்ட பிரபல நடிகர்

பிறகு டேய் என தினேஷ் சொல்கிறார் அதற்கு விஷ்ணு டெய்னு சொல்லாத எனக் கத்த பிறகு தினேஷ் ஏய் ஏய் என சொல்ல மாயா சைடில் நின்று கொண்டு  ஆக்ரோஷமாக தனது தலையை ஆட்டிக் கொண்டு தினேஷை கலாய்க்கிறார். விஷ்ணுவிடம் தினேஷ் மாயா கிட்ட 30 நாளா பார்த்தது அவ்வளவுதானா  என சொல்ல நரியென விஷ்ணு கூறுகிறார். இதற்கு தினேஷ் அமுல் பேபி என சொல்ல இதோடு ப்ரொமோ நிறைவடைகிறது.