ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திடம் அடிபணிந்த ஜப்பான்.. 4 நாட்கள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

Japan Movie : நடிகர் கார்த்தி வித்தியாசமான படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சர்தார், பொன்னியின் பார்ட் 1, பார்ட் 2 படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து கார்த்தி 25 வது படமான ஜப்பான்..

படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு கோலாகலமாக வெளியானது. ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் அனு இம்மானுவேல், சுனில், பாவா செல்லத்துரை, வாகை சந்திரசேகர், விஜய் மில்டன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

பாண்டியனுக்கு தெரியாமல் நடு இரவில் கோமதிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கதிர்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்

படத்தின் கதை என்னவென்றால்..  கார்த்தி சின்ன வயதில் இருந்து சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்கிறார் ஒரு கட்டத்தில் அந்த ஏரியாவில் பிரபலமடைகிறார். அந்த மாதிரியான சமயத்தில் ராயல் நகை கடையில் 200 கோடி மதிப்புள்ளன நகைகள் கடத்தப்பட்டுள்ளன இதை ஜப்பான் என்கின்ற கார்த்தி தான் கடத்திவிட்டார் என சொல்ல..

போலீஸ் அவரை தேடி கண்டுபிடித்து விசாரிக்கும் போது உண்மை தெரிகிறது. அதன் பிறகு நடக்கும் ஆக்சன், எமோஷன் தான் படத்தின் கதை.. படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் அள்ளி வருகிறது.

காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும் கிடைகாமலையா போகும்.. “ஜிகர்தண்டா 2” 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா .?

கார்த்தியின் ஜப்பான் படம் வெளியாகி இத்துடன் 4 நாட்கள் ஆன நிலையில் இதுவரை உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைக்கிறது அதன்படி பார்த்தையில் ஜப்பான் திரைப்படம் சுமார் 18 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களில் நல்ல வசூலை அள்ளினால் மட்டுமே ஜப்பான் திரைப்படம் தப்பிக்கும் என கிசுகிசுக்கபடுகிறது.