காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும் கிடைகாமலையா போகும்.. “ஜிகர்தண்டா 2” 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா .?

Jigarthanda DoubleX : 2023 ஆம் ஆண்டு நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனருக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன ஆரம்பத்தில் அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து  விஷாலின் மார்க் ஆண்டனி, ரஜினியின்  ஜெயிலர், ஷாருக்கானின் ஜவான் போன்ற படங்கள் வெற்றியை பதிவு செய்தது.

தற்பொழுது தீபாவளியை முன்னிட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்  திரைப்படம் மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்றே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தில் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நிமிஷா சஜயன், சைன் டாம் சாக்கோ..

சித்ராதேவி, கௌதம் எல்லாம் ஓரம் போங்க.. மகாவை ஒழித்து கட்ட இறங்கும் ஐஸ்வர்யா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

பாவா செல்லத்துரை, இளவரசு, அரவிந்த் ஆகாஷ், சத்யன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்திருந்தனர். படத்தின் கதை என்னவென்றால்.. ராகவா லாரன்ஸ் எப்படியாவது போட்டுத் தள்ள  வேண்டும் என்பதற்காக எஸ் ஜே சூர்யாவை களம் இறங்குகின்றனர்.  அந்த நேரத்தில் ராகவா லாரன்ஸ்க்கு சினிமாவில் நடிக்க ஆசையாக இருப்பதை தெரிந்து கொண்ட எஸ் ஜே சூர்யா..

பிறகு இயக்குனராக உள்ளே புகுகிறார். அதன் பிறகு நடக்கும் ஆக்சன், எமோஷனல் தான் படத்தின் கதை.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் தொடர்ந்து ஹவுஸ்புள்ளாக ஓடிக்கொண்டிருப்பதால் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

நீ டைம் பாஸ்க்கு தான் லக்கி.. சிவகார்த்திகேயனை திருமணம் செய்தது குறித்து பேசிய மனைவி ஆர்த்தி.!

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆன நிலையில் உலகம் எங்கும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதன்படி பார்க்கையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் 32 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளதாம் நிச்சயம் இந்த திரைப்படம் வருகின்ற நாட்களில் நல்ல வசூலை அள்ளி 100 கோடியை தொடும் என பலரும் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.