சம்மருக்கு காத்து வாங்க போகும் திரையரங்கம்.. ஒரேடியாக பின்னுக்கு போகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்..

2024 New movies: கடந்தாண்டு தொடர்ந்து சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வரை வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதே போல் இந்த வருடம் கடந்த வருடத்தை வசூலில் நல்லா வரவேற்பினை பெறும் எனவும் ஏராளமான நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனவரி மாதம் வெளியான படங்கள் சொல்லும் அளவிற்கு வசூலை பெறவில்லை.

இதனை அடுத்து இந்த ஆண்டு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்கிறது. எனவே இதனால் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆனால் ஆரம்பமே சிக்கலாக அமைந்துள்ளது.

ஒன்று சேர்ந்த களவாணி பயலுங்க.. என்னதான் கதறி அழுதாலும் காப்பாத்த முடியாது தமிழ்.. ஓடு ஓடிக்கிட்டே இரு கண்டிப்பா ஏதாவது ஒன்னு கிடைக்கும்..

இதனை அடுத்து சூர்யா நடிப்பில் கங்குவா, ரஜினி நடிப்பில் இந்தியன் 2, ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன், அஜித் நடிப்பில் விடாமுயற்சி, விஜய் டபுள் ஆக்சனில் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம், சிவகார்த்திகேயனின் எஸ்கே 21, விஜய் சேதுபதி மற்றும் சூரி நடித்துள்ள விடுதலை 2 ஆகிய படங்கள் இண்டஸ்ட்ரி ஹிட் படங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் சில திரைப்படங்கள் ஏப்ரல் மற்றும் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆனால் தற்பொழுது அதற்கு வாய்ப்பில்லையாம். அதன்படி சூர்யாவின் கங்குவா, அஜித்தின் விடாமுயற்சி, கமல்ஹாசனின் இந்தியன் 2, ரஜினிகாந்த் வேட்டையன் உள்ளிட்ட திரைப்படங்கள் ஆயுத பூஜை மற்றும் தீபாவளிக்கு தான் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிப்ரவரி 16 யை குறி வைத்த 23 திரைப்படங்கள்.. அட இத்தனை புது திரைப்படங்கலா

இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் கடும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்கள். அப்படி உதயம் உள்ளிட்ட தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில் பி.வி.ஆர் உள்ளிட்ட மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் ஸ்நாக்ஸ் விற்று லாபத்தை பார்த்து வருகிறார்கள். இவ்வாறு முதல் பாதியில் கிடைக்கவில்லை என்றாலும் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் கண்டிப்பாக ஒரு வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் ஆரம்பத்தில் வெளியான அயலான், கேப்டன் மில்லர், சிங்கப்பூர் சலூன், லால் சலாம் போன்ற திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு லாபத்தை தரவில்லை எனவே இதே போல் மற்ற படங்களும் அமைந்துவிடுமோ என பீதியில் உள்ளனர்.