பிப்ரவரி 16 யை குறி வைத்த 23 திரைப்படங்கள்.. அட இத்தனை புது திரைப்படங்கலா

February 16 OTT Release Movies: திரையரங்குக்கு சென்று படங்கள் பார்த்து என்டர்டைன்மென்ட் செய்வதை ஏராளமான ரசிகர்கள் பழக்கமாக வைத்திருந்த நிலையில் எப்பொழுது ஓடிடி என்ற ஒன்று பிரபலமானதோ அதிலிருந்து சமீப காலங்களாக ஓடிடிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வாரம் தோறும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஓடிடி ரிலீஸ் ஆகி வருகிறது.

எனவே இதனால் ரசிகர்கள் திரையரங்கிற்கு செல்லாமல் ஓடிடியில் படத்தை பார்த்து விடுகின்றனர். அதிலும் மேலும் சில படங்களும் திரையரங்களில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகுவதையும் பார்க்க முடிகிறது. கொரோனா காலத்திற்கு பிறகு ஓடிடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு உள்ளது.

வயசானாலும் பரவாயில்லை வசதியா இருக்காங்களே என திருமணம் செய்து கொண்ட 5 தமிழ் நடிகைகள்…

இந்நிலையில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம் அப்படி இந்த வாரம் கிட்டத்தட்ட 23 திரைப்படங்கள் பிப்ரவரி 16ஆம் தேதி அன்று ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாம். அப்படி அசோக் செல்வன் நடித்திருக்கும் சபாநாயகன் படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து ஜித்தன் ரமேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ரூட் நம்பர் 17 படம் அமேசான் பிரைமில் வெளியாகிறது.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான மிஷன் சாப்டர் ஒன், மலையாளத்தில் ஜெயராம் நடிப்பில் உருவான ஆபிரகாம் ஒஸ்லர் அமேசான் பிரைமில் 16ஆம் தேதி வெளியாகிறது. கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற கேரளா ஸ்டோரி திரையரங்குகளில் நல்ல வசூலை பெற்றது தற்பொழுது ஜீ 5 ஓடிடியில் வெளியாக உள்ளது.

தேசிய பதக்கங்களை வாசலில் வைத்து விட்டு கடிதம் எழுதி சென்ற திருடன்.!

மேலும் தமிழில் லவ் ஸ்டோரி என்ற வெப் சீரிஸ் ஆஹா ஓடிடியில் வெளியாகிறது. பாலிவுட் படமான ரைசிங்கனி vs ரைசிங்கனி என்ற படம் சோனி லைவ் ஓடிடி தளத்திலும், அமேசான் பிரைமில் ஆர்யா சீசன் 3 வெளியாக இருப்பதனால் இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து உள்ளது.