அஜித் நடிக்கும் “விடாமுயற்சி” படத்தின் கதை இதுவா.? பிரபலம் சொன்ன தகவல்

Vidaamuyarchi : மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் நாயகன் நடிகர் அஜித்குமார். இவர் வருடத்திற்கு ஒரு படத்தைக் கொடுத்து ஓடிக் கொண்டிருக்கிறார். கடைசியாக வெளியான துணிவு படம் அக்கறை கலந்த படமாக இருந்ததால்  நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டது.

அதனைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது இதற்காக அவர் சுமார் 10 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்து ஆள் டோட்டலாக மாறிய புகைப்படம் வெளியாகி உள்ளது.

பெட்டி படுக்கையுடன் ரவியை வெளியே துரத்தி விட்ட முத்து.. விஜயாவிடம் மாட்டிகிட்டு முழிக்கும் மீனா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் இணைந்து ரெஜினா, த்ரிஷா, அர்ஜுன் போன்றவர்கள் நடிப்பது உறுதியாகியுள்ளது.  முதல் கட்ட ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது அடுத்து துபாய், அபுதாபி போன்ற இடங்களில் படத்தின் ஷூட்டிங் நடைபெறும் என தகவல்கள் வெளி வருகின்றன.

இந்த நிலையில் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் கதையை இதுதான் என ஒரு பிரபல பிரபல பத்திரிக்கையாளர் கூறி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. படத்தில் அஜித்தும், த்ரிஷாவும் கணவன் மனைவிகளாக வாழ்கின்றனர் ஒரு தடவை சுற்றளவுக்காக வெளிநாடு செல்கிறார் அப்பொழுது த்ரிஷா எதிர்பாராத விதமாக காணாமல் போகிறார்.

கலகலப்பாகும் பிக் பாஸ் வீடு.! அனைவரும் எதிர்பார்த்த டான்ஸ் மாரத்தான் ஆரம்பம்..

வில்லன் குரூப்பில் மாட்டுகிறார். பிறகு அஜித் வில்லன் குரூப்பை தேடி கண்டுபிடித்து அவர்களை கொன்று தனது மனைவியை காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.. இதுதான் விடாமுயற்சி கதை என பிரபல பத்திரிக்கையாளர்  ஒருவர் கூறியுள்ளார்.