கலகலப்பாகும் பிக் பாஸ் வீடு.! அனைவரும் எதிர்பார்த்த டான்ஸ் மாரத்தான் ஆரம்பம்..

Bigg Boss 7 Tamil today promo 1: விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது டிக்கெடு ஃபினாலே நடைபெற்று வருகிறது. இதில் அர்ச்சனா, விஜய் வர்மா இருவரும் டிக்கெட் ஃபினாலே செல்வதற்கான வாய்ப்பை இழந்துள்ளார்கள்.

இவ்வாறு 70 நாட்களைக் கடந்தும் போட்டியாளர்களுக்கு இடையே சண்டை சச்சரவுகள் அதிக அளவில் இருந்து வரும் நிலையில் ஒருவருக்கொருவர் கிடைக்கும் நேரத்தில் பழிதீர்த்து வருகின்றனர். அந்த வகையில் அர்ச்சனா நிக்சனுக்கு இடையே கடந்த வாரம் கடும் சண்டை நிலவியது. பிறகு கமல்ஹாசன் அர்ச்சனா, நிக்சன், தினேஷ், மணி ஆகியோர்களை எச்சரித்ததால் இந்த வாரம் பெரிதாக சண்டை இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

பெட்டி படுக்கையுடன் ரவியை வெளியே துரத்தி விட்ட முத்து.. விஜயாவிடம் மாட்டிகிட்டு முழிக்கும் மீனா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

ஆனால் தற்பொழுது டிக்கட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெற்ற நிலையில் அதில் யாராவது இருவரை தேர்ந்தெடுத்து டிக்கெட் ஃபினாலே உங்களுக்கு தேவை இல்லை என நாமினேட் செய்ய வேண்டும். எனவே இதனால் அனைத்து போட்டியாளர்களும் சேர்ந்து விஜய் வர்மா மற்றும் அர்ச்சனாவை நாமினேட் செய்துள்ளனர். மேலும் கூடவே இருந்த தினேஷ் அர்ச்சனாவை நாமினேட் செய்ய அர்ச்சனா கடும் கோபத்தில் இருக்கிறார். 

இவ்வாறு இந்தப் பிரச்சினையே இதுவரையிலும் முடியாமல் இருக்கும் நிலையில் இன்று டான்ஸ் மாரத்தான் நடைபெறுகிறது. இதில் அனைத்து போட்டியாளர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரில் நடனமாடி அனைவரையும் மகிழ்விக்கின்றனர். அப்படி பூர்ணிமா, விஷ்ணு இவர்களுடைய நடனத்தை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.

தமிழை பழிவாங்கிறேன் என நினைத்து மேகனாவிடம் நேரடியாக மோதிய அர்ஜுன்.! புலின்னு தெரியாம அது வால புடிச்சுட்டியே தம்பி..

மாயா, நிக்சன் அனைவரும் நடனத்தில் கலக்க மாயாவிடம் மணி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என காமெடி செய்து கொண்டு இருக்கிறார். இன்றைய நாள் மிகவும் கலகலப்பாக இருக்கப் போகிறது. இதோடு ப்ரொமோ நிறைவடைகிறது.