கவின் நடித்த டாடா திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த பிக்பாஸ் பிரபலமா.? வெளிவந்த அதர்ச்சி தகவல்

Dada Movie : கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளிவந்து ரசிகர்களின் ஃபேவரைட் திரைப்படமாக மாறியது டாடா.. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கி இருந்தார். இளம் நடிகர் கவின் நடித்தார். அவர் உடன் இணைந்து அபர்ணாதாஸ், விடிவி கணேஷ்..

ஹரிஷ் குமார், பிரதீப் ஆண்டனி போன்றோர் நடித்து இருந்தனர். டாடா படம் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது.. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல பெரிய பெரிய வாய்ப்புகள் கவினை தேடி வந்திருக்கின்றன.

நவராத்திரி ஸ்பெஷலாக ஜாக்கெட் அணியாமல் புடவையில் தாறுமாறாக போட்டோ ஷூட் நடத்திய விஜே அஞ்சனா.. வைரல் புகைப்படம்

இந்த நிலையில் டாடா திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் கவினுக்கு முன்பு வேறு ஒரு நடிகர் தான் நடிக்க இருந்தாராம்.. அவர் வேறு யாரும் அல்ல இந்த படத்தில் இன்னொரு முக்கியமான ரோலில் நடித்த பிரதீப் ஆண்டனி தானாம்.. இந்த கதையை இயக்குனர் கணேஷ் அவரிடம் கூறியிருக்கிறார்.

பிறகு பிரதீப் கதை முழுவதையும் கேட்டுவிட்டு இந்த கதையில் ஹீரோவாக நடிக்க எனக்கு செட் ஆகாது கவினுக்கு தான் நல்லா இருக்கும் அவனை வைத்து படம் எடுங்கள் என்று கூற பிறகு இந்த படத்தில் ஹீரோவாக கவின் நடித்து படத்தையும் வெற்றி பெற வைத்துள்ளார்..

தளபதி 68 படத்தில் விஜய்க்கு வில்லனாகும் 80ஸ் நடிகர்.. சம்பளம் மட்டுமே இத்தனை கோடியா.?

இந்த தகவலை பிரதீப் ஆண்டனியின் நண்பர் ஒருவர் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.. தற்போது பிரதீப் ஆண்டனி விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 7 -ல் கலந்து கொண்டு கலக்கி வருகிறார்.. இந்த நிகழ்ச்சியில் இவரது விளையாட்டு சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.