ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே நடிகை மாற்றிய விடாமுயற்சி.! அஜித்துக்கு ஜோடி இவரா.?

Vidaamuyarchi : சினிமாயுலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகரும் ஒரு படம் முடிவதற்கு முன்பாகவே அடுத்த படத்திற்கான இயக்குனரை தேர்வு செய்து விடுவார்கள். குறிப்பாக ரஜினி, விஜய், சூர்யா போன்றவர்கள் ரொம்ப ஆர்வமாக இருப்பார்கள் ஆனால் அஜித் இதிலிருந்து மாறுபட்டவர் ஒரு படத்தை முடித்து விட்டால்  சரி கேப் விட்டு அதன் பிறகு தான் இயக்குனரையே தேர்ந்தெடுப்பார்.

அதனாலேயே அஜித் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுக்கிறார். துணிவு திரைப்படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் விடாமுயற்சி படத்தை தயாரிக்க உள்ளதாக ஆறு மாதத்திற்கு முன்பே அதிரடியாக அறிவிக்கப்பட்டது.

தகுதி இல்லாத இயக்குனர் லோகேஷ்.! திருந்தாத ஜென்மங்கள்.. லியோ டிரைலரை பார்த்துவிட்டு கழுவி ஊத்திய பிரபலம்

ஆனால் இதுவரையிலும் சூட்டிங் தொடங்குவதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் இருந்து வருகிறது ஆனால் சமூக வலைதள பக்கங்களில் பேச்சுக்கள் எழுவதுண்டு அதன்படி விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் துபாய், அபுதாபியில் நடக்கும் என்றும் படத்தில் அஜித்துக்கு ஜோடி த்ரிஷா என பேச்சுக்கள் வெளியாகின.

மேலும் அர்ஜுன், அர்ஜுன் தாஸ், சஞ்சய் தத் போன்றவர்கள் நடிக்க இருந்த தகவல் ரசிகர்களை குஷிப்படுத்தியது இவர்களுடன் நிக்காமல்  வலிமை படத்தில் அஜித்துடன் நடித்த ஹுமா குரேஷி மீண்டும் விடாமுயற்சியில் படத்தில் நடிக்க இருப்பதாக பேசப்பட்டது.

கௌதம் செய்த திருட்டுத்தனத்தால் லெப்ட், ரைட் வாங்கிய வேதாச்சலம்.. நாடகமாடி புருஷனை காப்பாற்றிய ஐஸ்வர்யா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

huma qureshi
huma qureshi

இந்த நிலையில் அந்த நடிகை மாற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது ஹுமா குரேஷி பதிலாக தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை என்றாலும் இணையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.