தகுதி இல்லாத இயக்குனர் லோகேஷ்.! திருந்தாத ஜென்மங்கள்.. லியோ டிரைலரை பார்த்துவிட்டு கழுவி ஊத்திய பிரபலம்

Leo Trailer : தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார் படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது நேற்று டிரைலர் வெளியானது. டிரைலர் பார்க்கையில் படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் படமாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

மேலும் இதில் விஜய் யாரோ ஒருவரை கொன்றுவிட பின் மொத்த வில்லன் படையும் இவரை துரத்துகிறது அதிலிருந்து தனது குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார் எப்படி அவர்களை வேட்டையாடுகிறார் என்பது தான் படமாக இருக்கும் என தெரியவந்துள்ளது விஜய் உடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், அர்ஜூன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் போன்றவர்கள் டிரைலரில் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவி – ஸ்ருதி காதலுக்கு எமனாக மாறிய முத்து.. புருஷனை மீறி சேர்த்து வைப்பாரா மீனா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

இந்த ட்ரெய்லரில் அதிகமா ஆக்ஷன் மற்றும் செண்டிமெண்ட் இருந்தன இதில் ஒரு கெட்ட வார்த்தையும் இருந்தது அதுவும் விஜய் கெட்ட வார்த்தை பேசியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  முதல் ஆளாக ப்ளூ சட்டை மாறன் ட்ரைலரை விமர்சித்த நிலையில் அடுத்ததாக ராஜேஸ்வரி பிரியா விமர்சித்துள்ளார்.

Leo
Leo

இவர் ஏற்கனவே லியோ படத்தில் இடம்பெற்றுள்ள நா ரெடி பாடலுக்கு விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து டிரைலரை பார்த்து விட்டு  தனது ட்விட்டர் பக்கத்தில் சொல்லி உள்ளது என்னவென்றால்.. லியோ ட்ரெய்லர் பார்த்தேன் விஜய் சுயநினைவோடு தான் நடித்தாரா.? விஜய் கெட்ட வார்த்தை பயன்படுத்தி உள்ளது (1.46 நிமிடத்தில்) அவரது தரத்தை மிகவும் குறைத்துள்ளது பெண்களை இழிவு செய்யும் வார்த்தை விஜய்க்கு வசனமா.?

லியோ டிரைலர் தவறவிட்ட மிகப்பெரிய சாதனை.? வருத்ததில் தளபதி ரசிகர்கள்

Rajeshwari Priya
Rajeshwari Priya

திருந்தாத ஜென்மங்கள் இதுல என்ன லாபம்.  ரசிகர்களை தவறாக வழிநடத்தும் விஜய்க்கு எமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துக் கொள்கிறேன் டியர் லோகேஷ் தகுதி இல்லாத இயக்குனர் திரைப்படத்துறை முன்வந்து இதனை எதிர்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.