2024 ல் தாறுமாறாக தன்னுடைய சம்பளத்தை உயர்த்திக்கொண்ட 5 புதுமுக நடிகர்கள்..

5 actors increased salary in 2024: கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ஏராளமான திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் முதல் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வரை எந்த பாகுபாடும் இன்றி பல கோடி வசூலை குவித்தது. முக்கியமாக வளர்ந்து வரும் நடிகர்களின் திரைப்படங்கள் தான் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்துள்ளது. அப்படி 2023ல் கிடைத்த வெற்றியால் 2024ல் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.

லால் சலாம்: சமீபத்தில் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்ற லால் சலாம் படத்தில் விக்ராந்த் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க லால் சலாம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த விக்ராந்த் ரூ. 70 லட்சம் சம்பளம் வாங்கினாராம். இதனை அடுத்து தற்பொழுது இவர் நடிக்கப் போகும் படங்களுக்கு 1.5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம்.

மேகனாவின் மொபைல் தமிழிடம் சிக்கியது.. அடுத்த ஆதாரத்தைக் காட்டி அர்ஜுனை நடுநடுங்க வைத்த தமிழ்..

மணிகண்டன்: நடிகர் மணிகண்டன் குட் நைட் படத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லவ்வர் படத்திற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். லால் சலாம் படத்துடன் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதனால் தனது அடுத்த படத்திற்கு ரூபாய் 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்க இருக்கிறாராம்.

கவின்: டாடா படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான கவின் இதன் மூலம் கிடைத்த வெற்றியால் தற்பொழுது 2 கோடி ரூபாயாக தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளாராம்.

ஹரிஷ் கல்யாண்: ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடைசியாக வெளியான பார்க்கிங் படத்திற்கு இவர் 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். இந்த படத்தினை ஹிட் ஆனதால் அடுத்த படத்தில் நடிப்பதற்காக 4 கோடி ரூபாயாக தனது சம்பளத்தை உயர்த்துள்ளார்.

அஜித், தனுசுக்கு no சொல்லிவிட்டு சூர்யா என்றவுடன் கிரீன் சிக்னல் கொடுத்த பிரபல நடிகை..

விஷ்ணு விஷால்: ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தில் நடிப்பதற்காக 4 கோடி ரூபாய் விஷ்ணு விஷால் வாங்கி உள்ளார். இவர் தனது அடுத்த படத்திற்கு 7 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.