கொடை வள்ளல் கருணை உள்ளம் கொண்ட விஜயகாந்த் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்தாத பிரபலங்கள்..

Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு வராத பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக ஜொலித்து வந்த விஜயகாந்த் சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் ஆர்வம் காமிக்க ஆரம்பித்தார். எனவே சினிமாவை மொத்தமாக விட்டுவிட்டு அரசியலில் இறங்கிய விஜயகாந்த் தனது முழுமூச்சா கொண்டு பலருக்கும் உதவி செய்தார்.

அந்த வகையில் தன்னுடன் நடித்த சக நடிகர், நடிகைகள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலருக்கும் ஏராளமான உதவி செய்திருக்கும் இவர் அதோடு மட்டுமல்லாமல் தன்னைப்போல் யாரும் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்பதற்காக சினிமாவில் அறிமுகமாகும் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருக்கும் பல உதவிகளை செய்திருக்கிறார். நடிகர் சங்க தலைவராக இருந்த பொழுது விஜயகாந்த் செய்த சாதனைகள் அதிகம். 

இது யாரு என் மகள் மாதிரி.. முந்திக்கொண்டு முதல் ஆளாக தனுஷ் குடும்பத்திற்கு உதவி செய்த கேப்டன்.. வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்..

நடிகர் சங்கத்தில் இருந்த அனைத்து கடன்களையும் அடைத்து விட்டு மீதி பணம் வைத்துவிட்டு இந்த பதவியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் சில மாதங்களாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்த விஜயகாந்த் இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார் இதனை அடுத்து திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என லட்சக்கணக்கானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் விஜய், இசைஞானி இளையராஜா, மாரி செல்வராஜ், பா.ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன் என ஏராளமான முன்னணி ஹீரோக்கள் நேராக விஜயகாந்து உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். இதனை அடுத்து விடாமுயற்சி படத்திற்காக அஜர்பைஜான் சென்றிருந்த அஜித் தற்பொழுது துபாயில் உள்ளார்.

எனவே தற்போது வர போட முடியாத சூழலில் இருப்பதாக தெரிவித்திருந்தார் இவர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை என பலரும் விமர்சனம் செய்தனர். மேலும் சீயான் விக்ரம், தனுஷ் போன்றவர்களும் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தவில்லை. நடிகர் சூர்யா, அவரது தம்பி கார்த்தி மற்றும் அப்பா சிவகுமார் ஆகியோரும் விஜயகாந்த் அஞ்சலி செலுத்தவில்லை.

யார பின்னுக்கு தள்ள பாக்குறீங்க முந்தி கொண்டு வந்த விஜய் டிவி சீரியல்..! இந்த வார சீரியல் டிஆர்பி ரேட்டிங் என்ன தெரியுமா..

தனுஷின் அக்காவுக்கு மெடிக்கல் சீட்டு வாங்கி கொடுத்தது விஜயகாந்த் தான். எனவே வெளியூரில் படப்பிடிப்பில் இருப்பதால் நேரில் வர முடியாத காரணத்தினால் ட்விட்டரில் விஜயகாந்த்க்கு இரங்கல் தெரிவித்தார். அதேபோல் சிம்புவும் வெளிநாட்டில் இருப்பதால் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்தார். இவரை அடுத்து சிவகார்த்திகேயனும் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்ற காரணத்தினால் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை என ட்விட்டரில் அஞ்சலி செலுத்தி இருந்தார்.