அக்கா தங்கையாக இருந்தாலும் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கிய பிரபல நடிகைகள்…

Tamil Actress: சினிமாவைப் பொறுத்தவரை பிரபலங்கள் தனக்கு நல்ல மார்க்கெட் இருக்கும் பொழுது வாரிசுகளை சினிமாவிற்கு அறிமுகப்படுத்துவது வழக்கம். அதேபோல் வாரிசுகள் மட்டுமல்லாமல் அக்கா தங்கைகளாக அறிமுகமாகி சினிமாவில் கலக்கிய டாப் 5 அக்கா-தங்கை நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

சிம்ரன்-மோனல்: பார்வை ஒன்றே போதும் என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மோனல் பத்ரி, லவ்லி, சமுத்திரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த சூழலில் 2002ஆம் ஆண்டு தற்கொலை செய்துக் கொண்டார். இவருடைய சகோதரியான சிம்ரன் தற்பொழுது வரையிலும் சினிமாவில் ஆக்டிவாக இருந்தார்.

நக்மா-ஜோதிகா: நடிகை நக்மா ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தாலும் தற்பொழுது சினிமாவை விட்டு விலகி உள்ளார். ஆனால் ஜோதிகா தொடர்ந்து தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ரஜினி கமலுக்கே பயத்தை காட்டிய 5 புது முகங்கள்.. 300 நாட்களுக்கு மேல் திரையில் ஓடிய டாப் 5 படங்கள்

ஊர்வசி-கல்பனா: 90 காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்த கல்பனா கடந்த 2016ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவருடைய சகோதரி ஊர்வசி தற்பொழுது வரையிலும் திரைப்படங்களில் நடித்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.

ராதிகா-நிரோஷா: வெள்ளித்திரை சின்னத்திரை என கலக்கி வரும் ராதிகா, நிரோஷா இருவரும் சினிமாவில் பிரபலமாக உள்ளார்கள். நிரோஷா முழுவதுமாக சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார் ராதிகா திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சத்தமே இல்லாமல் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தின் அப்டேட்டை சொன்ன சூப்பர் ஸ்டார்.. குஷியில் ரஜினி ரசிகர்கள்..

அம்பிகா-ராதா: நடிகை அம்பிகா தொடந்து சீரியல் நடித்து வருகிறார் இவருடைய சகோதரி ராதாவும் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார். இவ்வாறு தற்பொழுது வரையிலும் இவர்கள் இருவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்