ரஜினி, கமல் படத்தில் காமெடியனாக நடித்த லூஸ் மோகனை நினைவிருக்கிறதா? மறக்கமுடியாத நினைவுகள்

Loose Mohan: எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடியனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் லூஸ் மோகன். கமல்ஹாசனுக்கு மெட்ராஸ் பாஷையை சொல்லிக் கொடுத்ததே இவர்தான். எம்ஜிஆர் காலகட்டத்தில் அவர் நடிக்கும் திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த மோகன் அவருடன் பல ஆண்டுகள் பயணித்துள்ளார்.

80 காலகட்டத்தில் நகைச்சுவை நடிகராக விளங்கிய லூஸ் மோகன்.பிறகு நீதிக்கு தலைவணங்கு, மீனவ நண்பன், நவராத்திரி போன்ற திரைப்படங்களில் எம்ஜிஆர் உடன் இணைந்து நடித்துள்ளார். அப்பொழுதெல்லாம் இவரை ப்ராக்கெட் மோகன் என அழைத்துள்ளார்கள். இவரது தந்தை பெயர் லூஸ் ஆறுமுகம் அதனால் இவரும் 80-க்கு பிறகு லூசு மோகன் என மாற்றிக் கொண்டார். இது நன்றாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதால் இதனையே தனது பெயராக வைத்துக் கொண்டார்.

ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடித்து உடலில் பிளேட் வைத்து பொருத்தப்பட்ட 5 நடிகர்கள்.!

கமலுடன் சட்டம் என் கையில் என்ற படத்தில் நடித்திருந்தார் இந்த சமயத்தில் லூஸ் மோகனுக்கு தான் சென்னை பாஷை நன்றாக பேச தெரியுமா எனவே கமலுக்கும் சென்னை பாஷையை பேச கற்றுக் கொடுத்துள்ளார். அதேபோல் மம்மூட்டிக்கும் ராஜமாணிக்கம் படத்தில் திருவனந்தபுரம் பாஷையை கற்றுக் கொடுத்துள்ளார் லூஸ் மோகன்.

இவர்களைத் தொடர்ந்து தங்க மகன் படத்தில் ரஜினியோடு சென்று பூர்ணிமாவை கலாட்டா செய்வார். பிறகு மோகன் காமெடிகள் சினிமாவில் பிரபலமாக அவருக்கு ஜோடியாக நடித்த பிந்துகோஷா இணைந்துக் கொண்டார் இவர்களது ஜோடி ஹிட் அடிக்க பீக்கில் இருந்தார்.

சினிமாவில் கூட இருந்தவர்களை தம்பியாக நினைத்து வளர்த்து விட்டு அழகு பார்த்த 5 பிரபலங்கள்.. நன்றி மறந்த சிவகார்த்திகேயன்..

இவ்வாறு நல்ல நகைச்சுவை நடிகராக பிரபலமான லூஸ் மோகன் கடைசியாக அழகி படத்தில் பாண்டுவின் மாமனாராக நடித்திருப்பார். கடந்த பிப்ரவரி 8ம் தேதி லூஸ் மோகனின் நினைவு நாள் என்பதால் இவர் குறித்த நினைவுகளை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தனர்.