6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் 2 படத்தின் மாஸ் அப்டேட்.! ரசிகர்கள் உற்சாகம்..

India 2 Update: சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தின் அதிகாரபூர்வமான அப்டேட்டை படக் குழு வெளியிட்டு இருக்கும் நிலையில் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.  ஷங்கர்-கமல்ஹாசன் கூட்டணியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் இந்தியன்.

இந்த படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியாகி வசூலை குவித்தது. முக்கியமாக இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் கமல்ஹாசனின் நடிப்புதான் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்து மாஸ் காட்டினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியன் 2 படத்தின் இரண்டாவது பாகம் குறித்து  கடந்த 2017ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமான அப்டேட்டை தந்தனர்.

மருத்துவ முத்தமான ஆரவ்-ஓவியாலா சும்மா.. நேரடியாக லிப் லாக் தான்.. மணி-ரவீனா ஜோடிக்கே டஃப் கொடுக்கும் காதல் ஜோடி

இந்த நேரத்தில் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பைனலில் பணியாற்றி வந்ததால் சில காரணங்களாக சூட்டிங் தள்ளிப்போனது. பிறகு 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் மேக்கப் செட் ஆகவில்லை எனக் கூறி சில மாற்றங்களை செய்தனர். இதனை அடுத்து சில மாதங்களுக்கு பின்பு மீண்டும் இப்படத்தின் சூட்டிங் தொடங்கியது.

indian 2 update
indian 2 update

இந்நிலையில் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு சூட்டிங் நடந்தது அப்பொழுது எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்ததில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எனவே இதனால் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரெட் ஜெயண்ட் மூவிஸ் பிரச்சனைகளை தீர்த்து கடந்த செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்கினர்.

எழிலின் வாழ்க்கையை காப்பாற்ற போராடும் பாக்கியா.! என் பொண்டாட்டி புள்ளையும் என் கூட வாழ கூடாதா கேள்வி எழுப்பும் கணேசன்.!

இவ்வாறு தற்பொழுது தான் வெற்றிகரமாக சூட்டிங் நிறைவு செய்திருக்கும் நிலையில் அடுத்த கட்ட பணிகளில் படக் குழு ஈடுபட்டு வருகிறது. அதன்படி நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் வருகின்றன நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இதனை அடுத்து நவம்பர் 3ம் தேதி இந்தியன் 2 படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர். இவ்வாறு இந்த அப்டேட் கடந்த 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாக இருப்பதினால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்