தன்னுடைய படத்தில் இவர்கள்தான் பெஸ்ட் என கிப்ட் கொடுத்து அசத்திய விஜய்.! அந்த 5 லக்கிமேன் யாருப்பா..

Vijay : தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வருவர் நடிகர் விஜய் லியோ படத்தை தொடர்ந்து தற்போது தளபதி 68 படத்தில் இணைந்துள்ளார் இந்த படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டு ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்கொண்டு இருக்கிறது. சமிப காலமாக பல டாப் நடிகர்களின் படங்கள் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தால் அந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர்..

நடிகர்கள் போன்றவர்கள் படத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பளத்தை தாண்டியும் வேறு சில பரிசு பொருட்களை கொடுத்து மகிழ்விப்பது வழக்கமாக இருந்து வருகின்றன.. அப்படி நடிகர் விஜய்யும் தன்னுடன் பணியாற்றிய சிலரின் திறமையை பார்த்து வியந்து அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று யோசித்து காஸ்ட்லியான கிப்ட் வாங்கி கொடுத்து இருக்கிறார்..

Leo : விஜய் – த்ரிஷா லிப்லாக் காட்சியை ரசித்து எடுத்தாரா லோகேஷ்.? ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரசியம்

விஜய் யார் யாருக்கு என்னென்ன கிப்ட் வாங்கி கொடுத்திருக்கிறார் என்பதை பார்ப்போம்.. இயக்குனர் பேரரசு : விஜயை வைத்து திருப்பாச்சி படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் வெற்றி கண்ட பேரரசுவிற்கு விஜய் மாருதி கார் வாங்கிக் கொடுத்திருக்கிறாராம்.

பிகில் படக்குழு : அட்லீ இயக்கிய பிகில் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் இந்த படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேவரட்டாக இருந்து வருகின்றன.. இந்த படத்தில் பணியாற்றிய 400 தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விஜய் கோல்டு ரிங் பரிசாக கொடுத்திருக்கிறார்.

ஜெயிலர் ரஜினி முதல் பருத்தி வீரன் கார்த்தி வரை அடுத்தடுத்து வெளியாகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்.! இதோ முழு லிஸ்ட்

யோகி பாபு : காமெடி நடிகராக பிரபலமடைந்து தற்போது கதாநாயகனாகவும் கலக்கி வரும் யோகி பாபு நடிப்பை தவிர கிரிக்கெட்டிலும் ஆர்வம் கொண்டவராம் இது தெரிந்த விஜய் யோகி பாபுவிற்கு ஒரு காஸ்ட்லியான கிரிக்கெட் பேட்டை கிப்டாக அனுப்பி வைத்திருக்கிறார்..

அனிருத் : கோலிவுட்டில் பிரபல இயக்குனராக புகழ்பெற்று வரும் அனிருத் விஜய்யின் கத்தி படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே ஹிட்டானதால் விஜய் அனிருத்திற்கு ஒரு காஸ்ட்லியான பியானாவை கிப்ட் ஆக கொடுத்திருக்கிறார்.

அக்‌ஷ்சத் தாஸ்: மெர்சல் படத்தில் விஜய்க்கு மகனாக மாறன் கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் அக்‌ஷ்சத் தாஸ் இவரை விஜய்க்கு ரொம்பவே பிடிக்க அக்‌ஷ்சத் தாஸ் பிறந்தநாள் அன்று ஒரு கேமராவை வாங்கி பரிசாக கொடுத்திருக்கிறார்.