ஜெயிலர் ரஜினி முதல் பருத்தி வீரன் கார்த்தி வரை அடுத்தடுத்து வெளியாகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்.! இதோ முழு லிஸ்ட்

Tamil Movies List: சமீப காலங்களாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடைப்போட்டு வரும் நிலையில் அனைத்து நடிகர்களும் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகின்றனர். அந்த வகையில் தல-தளபதி முதல் ரஜினி-கமல்ஹாசன் வரை தற்போது உருவாகி வரும் படங்கள் குறித்து பார்க்கலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: ஜெயிலர் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதனை அடுத்து தலைவர் 171வது படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

உலகநாயகன் கமல் ஹாசன்: சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் தனது 233வது படத்தில் இணைந்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் மணிரத்தினம் கமல் கூட்டணியில் KH 234 படமும் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளியானது.

தல அஜித்: துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த படத்தினை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் அஜித் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி விஜய்: சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி திரையரங்கில் வெற்றி நடைப்போட்டு வரும் நிலையில் இந்த படத்தினை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இதற்கான படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தினை தொடர்ந்து தளபதி 69வது படத்திற்காக இயக்குனர் சங்கருடன் விஜய் இணைய போவதாக கூறப்படுகிறது.

சூர்யா: சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாக இருக்கும் தனது 43வது படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியான நிலையில் இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திலும் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

சியான் விக்ரம்: கௌதம் வாசு தேவ்மேனன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரத்தில் விக்ரம் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தை நான் தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். தங்கலான் வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இதனை அடுத்து இன்று மாலை 6 மணிக்கு சியான் விக்ரமின் 62வது படம் குறித்த அப்டேட் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சியான் 68 படத்தினை இயக்குனர் su.சுகுமார் இயக்க உள்ளார்.

கார்த்தி: ஜப்பான் படத்தில் நடித்து முடித்திருக்கும் கார்த்தி இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கை 2 படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு இவர்களை தொடர்ந்து தனுஷ் கேப்டன் மில்லர், ஜெயம் ரவியின் பிரதர், ஜி.வி பிரகாஷின் ரீபெல் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருக்கிறது.