எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. ஒருமுறை கூட பார்க்கல.? நடிகை கீர்த்தி சுரேஷின் பதிலால் காண்டான ரசிகர்கள்

Keerthy Suresh : தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ். முதிலில் மலையாள படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஹீரோயின் அவதாரம் எடுத்தார் தமிழில் இது என்ன மாயம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் நடித்த ரெமோ, பைரவா, ரஜினிமுருகன் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டார் கடைசியாக கூட இவர் நடித்த தசரா, மாமன்னன், போல சங்கர் ஆகிய படங்கள் வெற்றி பெற்ற நிலையில் சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னி வெடி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

எல்லை மீறிய காட்சி.. A சான்றிதழ் வாங்கிய படங்களில் அசால்டாக நடித்த 5 நடிகைகள்

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கீர்த்தி சுரேஷ்  நான் நடித்த படங்களை பார்க்கும் பழக்கம் எனக்கு கிடையாது என கூறி இருந்தார். இது மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் பேசு பொருளாக மாறியது இது குறித்து நடிகரும் பத்திரிகையாளருமான பதில் போன்ற ரங்கநாதன் தன்னுடைய பார்வையில் அது எப்படி உள்ளது என்பது குறித்து பேசி உள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் நான் நடித்த படங்களை பார்ப்பதில்லை என்று கூறி இருக்கிறார் அவர் நடித்த படங்களை அவரே பார்ப்பதில்லை என்றால் நாம் எதற்கு காசு கொடுத்து பார்க்க வேண்டும். நிஜமாக கீர்த்தி சுரேஷ் அவர் நடித்த படங்களை பார்ப்பதில்லை என்ற கேள்வியை எழுப்பினர் தொடர்ந்து பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ் இது எனக்கு என்ன காரணம் எனக் கூறினார்.

சூப்பர் ஹிட் அடித்த “செந்தூரா பாண்டி” படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அந்த நடிகரா.? வெச்சி செஞ்சிருக்காரு..

ஏனென்றால் நான் அடுத்த படங்களை பார்க்கும் பொழுது படத்தில் ஏதேனும் குறையை கண்டுபிடிப்பேன் அதை அப்படி செய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாம் என்று எண்ணம் தோன்றும் இதே நினைவில் நான் அடுத்த ஒரு வார காலம் இருப்பேன். எனவே இப்படியான சிக்கலில் இருந்து தப்பிக்கவே நான் நடித்த படங்களை நான் பார்ப்பதில்லை..

என கூறி இருந்தார் இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் திட்டமிட்டு படத்தை பார்ப்பதில்லை ஓகே ஆனால் நீங்கள் செல்லும் எதர்ச்சியாகவோ இல்லை தவிர்க்க முடியாமல் உங்களுடைய படத்தை பார்த்திருக்க மாட்டீர்களா எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் மேலும் இது நம்பும் படியான பதில் இல்லை எனவும் கீர்த்தி சுரேஷுக்கு பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.