சூப்பர் ஹிட் அடித்த “செந்தூரா பாண்டி” படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அந்த நடிகரா.? வெச்சி செஞ்சிருக்காரு..

Vijayakanth : திரை உலகில் என்னதான் ஹிட் கொடுத்து பிரபலம் அடைந்திருந்தாலும் நல்ல உள்ளமும் நேர்மையும் இருந்தால் மட்டுமே அந்த நடிகரை காலம் கடந்த பிறகும் கொண்டாடுவார்கள் அப்படி எம்ஜிஆர், சிவாஜியை தொடர்ந்து கேப்டன் விஜயகாந்தையும் தற்பொழுது மக்கள் கொண்டாடி வருகின்றனர் ஏனென்றால் சினிமாவில் தன்னை சுற்றி இருப்பவர்களை வளர்த்து விட்டு அழகு பார்த்தார்.

மேலும் கஷ்டப்பட்டவர்களுக்கு  தன்னால் முடிந்த காசுகளையும், உணவுகளையும் கொடுத்து அழகு பார்த்தார். இப்படிப்பட்ட விஜயகாந்த் திரை உலகில் இருந்து விலகி பின் அரசியலில் என்ட்ரி கொடுத்தார் அங்கேயும் நல்ல வரவேற்பு கிடைத்தது நேர்மையாக இருந்ததால் எதிர்க்கட்சி தலைவராக பதவி ஏறினார் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வந்த இவர் திடீரென உடல் நல குறைவு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

கேப்டன்சி டாஸ்க்கு தேர்வான அர்ச்சனா, ஸ்கூல் சுரேஷ்.. தினேஷ் மீது கோபப்பட்ட நிக்சன் – வெளியான பிக்பாஸ் 7 ப்ரோமோ

விசேஷ நாட்களில் மட்டுமே அரசியல் பிரமுகர் மற்றும் தன்னுடைய ரசிகர்களை பார்த்து வந்த விஜயகாந்த் திடீரென ரொம்ப உடல்நிலை மோசமானதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இன்னும் பத்து நாட்களுக்கு மேல் அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் விஜயகாந்த் நடித்த செந்தூர பாண்டி படம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர நடிகர் பாரதி கண்ணன் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சொன்னது என்னவென்றால்.. செந்தூரபாண்டி படத்தில் விஜயகாந்த் பதிலாக முதலில் நடிக்க இருந்தது சத்தியராஜ் தான்..

ரஜினியின் “பாபா திரைப்படம்” செய்த மிகப்பெரிய சாதனை.! இதுவரை யாருமே செய்யல..

ஆனால் விஜயகாந்த் அளவிற்கு சத்யராஜ் உதவி செய்யும் எண்ணம் இல்லாதவர் என கூறினார் படபிடிப்பில் இருந்த சத்யராஜை பலமுறை அணுகிய பொழுதும் பார்க்கலாம் அப்புறம் பார்ப்போம் என சொல்லியே நாட்களை கழித்து விட்டாராம் அதன் பிறகு எஸ்.ஏ.சி , ஷோபாவும் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஷோபா தான் நம்ம விஜியை ( விஜயகாந்த்) கேட்டால் என்ன என்று ஐடியா கொடுத்தாராம்.

அதன் பிறகு எஸ்.ஏ.சி தன்னை வளர்த்தவரே உதவி கேட்கிறார் என விஜய் நினைத்துக் கொண்டால் என்ன பண்ணுவது என கேட்டிருக்கிறார் அதற்கு ஷோபா அப்படியெல்லாம் இல்லை விஜயகாந்த் இடம் கேளுங்கள் என சொல்ல உடனடியாக போன் செய்தாராம் போனை எடுத்ததும் விஜயகாந்த் சொல்லுங்கள் சார் என அவருடைய பாணியில் கேட்டிருக்கிறார் முழு விவரத்தையும் எஸ்ஏசி சொல்ல என்ன கதை சம்பளம் கால்ஷீட் என்பதை பற்றி எல்லாம் கேட்காமல் உடனே ஓகே சொல்லி உள்ளார்.

கடைசியாக விஜயகாந்த் வீட்டில் இரு வருகிறேன் என சொல்லி இருக்கிறார் அதற்கு விஜயகாந்த் என்ன எஸ்ஏசி சார் என்னை பார்க்க வருவதா நானே வருகிறேன் போனை வையுங்கள் என சொல்லிவிட்டு அடுத்த கணமே எஸ்.ஏ.சி வீட்டிற்கு பறந்து விட்டாராம் விஜயகாந்த்.. இப்படி நடந்த படம் தான் செந்தூரப் பாண்டி திரைப்படம் என பாரதி கண்ணன் கூறியுள்ளார்.