கேப்டன்சி டாஸ்க்கு தேர்வான அர்ச்சனா, ஸ்கூல் சுரேஷ்.. தினேஷ் மீது கோபப்பட்ட நிக்சன் – வெளியான பிக்பாஸ் 7 ப்ரோமோ

BiggBoss 7 Promo 2 December 01 : பிக் பாஸ் 7 ல் ஒவ்வொரு நாளும் சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இல்லாமல் பிக் பாஸ் புது புது டாஸ்க்குகளை கொடுத்து போட்டியாளர்களுக்கிடையே  கொளுத்தி போடுகிறார்.. அந்த வகையில் தற்பொழுது பிக் பாஸில் இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஜோடி ஜோடிகளாக பிரிந்து அவர்களின் கையை கையிரில் கட்டி உள்ளனர்.

அதில் நேற்றைய எபிசோடில் அர்ச்சனா மற்றும் விஷ்ணு இருவரும் ஒரு ஜோடி, இருவருக்கும் இடையே பல வாக்குவாதங்கள் ஏற்பட அர்ச்சனா கயிறை அவிழ்த்துவிட்டு என்னால  இவர் கூட விளையாட முடியாது என்று ரூல் பிரேக் செய்தார்.. இன்றைய எபிசோடிலும் தினேஷ் மற்றும் மாயா இடையே சண்டை வந்து மாயா தினேஷை நான்சென்ஸ் என்று திட்ட பதிலுக்கு அவரும் திட்டுகிறார்.

ரஜினியின் “பாபா திரைப்படம்” செய்த மிகப்பெரிய சாதனை.! இதுவரை யாருமே செய்யல..

இந்நிலையில் இன்றைய பிக் பாஸ் எபிசோடு காண இரண்டாவது புரோமோ வெளியாகியிருக்கிறது அதில் கேப்டன்சி டாஸ்க்கில் கலந்து கொள்ள போட்டியாளர்களை தேர்வு செய்கின்றனர்.. அது எப்படி என்றால் ஒவ்வொரு ஹவுஸ் மேட்டாக வந்து போடிஎம்மில் நிற்க வேண்டும்.

அவர் கேப்டனாக வேண்டுமென்று நினைத்தால் மற்ற போட்டியாளர்கள் ஜியேர்ஸ் பண்ண வேண்டும்.. அப்பொழுது அர்ச்சனா வந்து நிக்கும் பொழுது நிறைய போட்டியாளர்கள் ஜியேர்ஸ் பண்ணினர். பிறகு சரவண விக்ரம் வந்து நிற்கும் போது எந்த போட்டியாளர்களும் ஜியேர்ஸ்  பண்ண வில்லை இதில் கடைசியாக அர்ச்சனா மற்றும் கூல் சுரேஷ் வெற்றி பெற்றனர்.

அஜித் செய்யும் பிரியாணிக்கு நான் அடிமை.. பிரபல நடிகரின் பேச்சால் குஷியான ரசிகர்கள்

மேலும் மணி மற்றும் விஷ்ணு இருவரில் யாருக்கு அதிக வரவேற்பு என்று பார்க்கும் பொழுது சிலர் விஷ்ணு என்றனர் சிலர் மணி என்றனர் அதனால் கேப்டன் நிக்சன் விஷ்ணு என்று சொல்ல உடனே தினேஷ் கேப்டன் விஷ்ணுவுக்கு ஃபேவரைட் பண்றாரு என்று சொல்ல நிக்சன் கோபப்பட்டு கத்தும் புரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றன.