அஜித் செய்யும் பிரியாணிக்கு நான் அடிமை.. பிரபல நடிகரின் பேச்சால் குஷியான ரசிகர்கள்

Ajith : நடிகர் அஜித்குமார் சினிமா உலகில் ஒரு கோடு போட்டு ஓடிக்கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் ஏனென்றால் ஒரு படம் முடிந்தவுடன் அடுத்த படத்தில் கமிட்டாகாமல் தனக்கு நாம் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு குடும்பத்தை பார்ப்பது, தனக்கான வேலைகளையும் செய்து கொண்ட பிறகு தான் அடுத்த படத்தில் கமிட் ஆகுவார்.

அப்படி துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்த வருகிறார் முதல் கட்ட ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து அடுத்த கட்ட சூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது. விடாமுயற்சி படம் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.

அந்த நல்ல உள்ளத்திற்கு ஒன்னும் ஆகாது.. விஜயகாந்த் ஆரோக்கியத்துடன் வீடு திரும்புவார் – பிரபல நடிகர்

இந்த நிலையில் அன்னபூரணி படத்தில் நடித்த நடிகர் ஜெய் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்பொழுது அவரிடம் அஜித் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு  பதில் அளித்துள்ளார். மங்காத்தா படத்தின் சூட்டிங்கின் போது அஜித் கையால் பிரியாணி செய்து கொடுத்துள்ளார் இதனை வெங்கட் பிரபு எனக்கு போன் பண்ணி சொன்னார்.

அன்று நான் ரொம்ப மிஸ் பண்ணி விட்டேன். ஒரு தடவை வெங்கட் பிரபுவின் பிறந்தநாள் வந்தது. அப்பொழுது சிம்பு, நான் மற்றும் பலர் கலந்து கொண்டோம் அதில் அஜித் அண்ணாவும் கலந்து கொண்டார் உடனே நாங்கள் பிரியாணி செய்து தாருங்கள் அண்ணா எனக் கேட்டோம். 45 நிமிடங்கள் வெயிட் பண்ணுங்கள் ஒரு நல்ல பிரியாணி சமைத்து தருகிறேன் என்று கூறினார்.

காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.. வாடிவாசலுக்கு ஆப்பு வைத்த அஜித்.! வெளியான தகவல்

ஒரு எதிர்பார்ப்பு இருந்தால் அது எதிர்பார்த்த அளவிற்கு வராது ஆனால்  அஜித் சார் செஞ்ச பிரியாணி அந்த எதிர்பார்ப்பையும் மீறி செம சூப்பராக இருந்தது என்னை தாண்டி அனைவரையுமே அந்த பிரியாணியை திருப்தி அடைய செய்தது. பிரியாணி என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் என நடிகர் ஜெய் கூறி உள்ளார்.

Jai
Jai