சங்கீதாவை லவ் பண்றேன்.. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த பிரபலம்.. வெளிவந்த பல வருட ரகசியம்

Vijay : தளபதி விஜய் தன்னுடைய ரசிகர்களை சந்தோஷப்படுத்த அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான வாரிசு, லியோ படங்கள் ஹிட்  அடித்தது அதனைத் தொடர்ந்து தளபதி 68 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க டைம் டிராவல் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என தகவல்கள் வெளி வருகின்றன.

மேலும் விஜய் இளமையான தோற்றத்தில் தென்படுவார் என கூறப்படுகின்றன இதனால் தளபதி 68 படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட விஜய் சினிமா ஆரம்பத்தில் வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்தார் அந்த சமயத்தில் விஜய் சங்கீதா நடிப்பில் உருவான திரைப்படம் பூவே உனக்காக. இந்த படம் வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடியது.

சைலண்டாக நடந்த விக்கி படத்தின் பூஜை.. நயன்தாரா மிஸ்.. ஹீரோயின் இவரா.? வைரலாகும் புகைப்படம்

இந்த படத்திற்கு பிறகு விஜய்க்கும் சரி, சங்கீதாவுக்கும் சரி அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்தது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் நடிகை சங்கீதாவும், அவருடைய கணவர் சரவணனும் சேர்ந்து பேட்டி கொடுத்தார். பூவே உனக்காக படத்தில் சரவணன் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் அப்பொழுது சங்கீதா நடித்தார். அப்போது இருவருக்கிடையே காதல் மலர்ந்து பின் திருமணம் செய்து கொண்டனர்.

காதல் மலர்ந்தது குறித்தும், விஜய் குறித்தும் பேசி உள்ளனர் அவர்கள் சொன்னது என்னவென்றால்.. பூவே உனக்காக  படத்தில் ஒளிப்பதிவாளர் சரவணன் சங்கீதாவை காதலிக்க தொடங்கியதை நடிகர் விஜயிடம் கூறி இருக்கிறார் இதை கேட்ட விஜய் அப்படியா என சொல்லி ஷாக் ஆகிவிட்டாராம் மேலும் இது எப்போன்னா நடந்தது நானும் சூட்டிங் ஸ்பாட்ல தானே இருக்கேன்..

ரஜினிக்கு சிவாஜி செய்த உதவி… காலத்துக்கும் நன்றி கடன் பெற்றவராய் இருக்கும் சூப்பர் ஸ்டார்..

யாருமே சொல்லவே இல்லை என கேட்டுள்ளார் அதன் பின்னர் திருப்பாச்சி  சூட்டிங் போது சங்கீதா பற்றி விஜய் விசாரித்ததோடு அவரை பார்க்கவும் அழைத்து வர சொன்னதாக சரவணன் கூறினார் இதே போல் பூவே உனக்காக படம் முதல் இப்பொழுது வரை விஜயின் வளர்ச்சியை பார்த்து பிரமிப்பதாக சங்கீதா தெரிவித்துள்ளார் எங்கேயாவது பொது நிகழ்ச்சிகளில் விஜய்யை பார்ப்பதாகவும்,  பேசிக்கொள்வோம் என நடிகை சங்கீதா கூறி உள்ளார்.