விக்ரம் படத்தை நான் காப்பி அடிக்கல.. லோகேஷ் கிட்ட கதை சொல்லிவிட்டேன் – இயக்குனர் நெல்சன் சொன்ன உண்மை

Nelson Dlilpkumar : 2023 ஆம் ஆண்டு டாப் நடிகர்களுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு படத்தை தொடர்ந்து ரஜினியின் ஜெயிலர் வெளிவந்து வெற்றி பெற்றது. இப்போ விஜயின் லியோ வசூல் வேட்டை ஆடி வருகிறது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் முழுக்க முழுக்க அப்பா – மகன் பாசத்தை மையமாக வைத்து உருவானது படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், மோகன்லால், வசந்த ரவி, விநாயகன், யோகி பாபு, தமன்னா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

Leo : லோகேஷ் கொடுத்த ஸ்கிரிப்டில் மாற்றங்கள் நடந்ததா.? இல்லையா.? உண்மையை சொல்லி அதிர வைத்த தயாரிப்பாளர்

படம் வெளிவந்து சக்கபோடு போட்டது ஒட்டுமொத்த 600 கோடிக்கு மேல அள்ளி வெற்றி கண்டது இந்த படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் இயக்குனர் நெல்சன், ரஜினி, அனிருத் ஆகியவர்களுக்கு ஒரு கோடி மதிப்பிலான சொகுசு காரை பரிசாக கொடுத்திருந்தார்.

ஜெயிலர் படத்தை பார்த்த சிலர் லோகேஷின் விக்ரம் படத்துடன் ஒத்துப் போவதாக கூறி கமெண்ட் அடித்தனர் அதற்கு அப்பொழுது நெல்சன் விளக்கம் கொடுத்திருந்தார் அவர் சொன்னது என்னவென்றால்.. விக்ரம் ஷூட்டிங்  தொடங்குவதற்கு முன்பே நான் ஜெயிலர் கதையை லோகேஷ் கிட்ட சொல்லிவிட்டேன் ஆனால் விக்ரம் வெளியான போது லோகேஷ் தன்னிடம் படம் பார்க்குமாறு கூறியிருந்தார்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா? அப்பனா பெண் போட்டியாளர் கிடையாதா..

விக்ரம் படத்தை பார்த்த பின் அதுவும் ஜெயிலர் பட கதை போலவே இருந்தது ஆனால் நிறைய வித்தியாசம் இருந்ததால் ஜெயிலர் கதையில் எந்த மாற்றத்தையும் நான் செய்யவில்லை என கூறி இருந்தார். இப்போ லியோ இடம்பெற்று உள்ள ஹயானா சீன் நெல்சனின் ஐடியா என்றும் நெட்டிசன்கள் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.