இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா? அப்பனா பெண் போட்டியாளர் கிடையாதா..

Bigg boss season 7 3rd week Eviction: விஜய் டிவியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். ஒவ்வொரு வாரமும் வாரத்தின் இறுதியில் ஒரு போட்டியாளர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து எந்த போட்டியாளர் வெளியேறப் போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 6 சீசன்களை விட இந்த சீசனுக்கு தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ஸ்மால் பாஸ் வீடு, பிக் பாஸ் வீடு என 18 போட்டியாளர்களையும் இரண்டு குழுவாக பிடித்துள்ளார்கள். அதாவது ஸ்மால் பாக்ஸ் வீட்டில் இருப்பவர்கள் சுவாரஸ்யம் இல்லாத போட்டியாளர்கள் என வாரம் தோறும் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகிறார்கள்.

இவர்கள் தான் அந்த வாரம் முழுவதும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு சமைத்து தர வேண்டும். இதுவே அவர்களுடைய தண்டனையாக கருதப்படுகிறது அப்படி இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் மாயா, பூர்ணிமா இவர்களுடைய ஆட்டம் தாங்க முடியவில்லை எனவே இவர்களில் ஒருவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த வார நாமினேஷனில் ஐஷு, விஜய் வர்மா, மாயா, வினுஷா, விசித்ரா, பூர்ணிமா, பிரதீப் ஆண்டனி, விக்ரம், மணிச்சந்திரா, அக்ஷயா உள்ளிட்ட 11 பேர் சிக்கி உள்ளார்கள். இவர்களில் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று விஜய் வர்மா சனிக்கிழமையான நேற்றே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரம் குறைவான வாக்குகளை பெற்று அனன்யா வெளியேறினார். இவர் வெளியேறிய அடுத்த நாளே உடல் நல குறைவினால் பிக் பாஸ் வீட்டை விட்டு பவா செல்லதுரை வெளியேறியதால் கடந்த வாரம் நோ எவிக்ஷன் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வாரம் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று இரண்டாவது போட்டியாளராக விஜய் வர்மா வெளியேறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.