GOAT படத்திற்கு இயக்குனர் “வெங்கட் பிரபு” வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Venkat Prabhu : மக்கள் மத்தியில் காமெடி படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது அதை உணர்ந்து கொண்ட சில இயக்குனர்கள் தொடர்ந்து தமிழ் படங்களை எடுத்து வெற்றிகளை அள்ளுகின்றனர். அந்த வரிசையில் இடம் பிடித்தவர் வெங்கட் பிரபு. முதலில் நடிகராக வலம் வந்த இவர் சென்னை 600028 என்னும் படத்தை எடுத்து இயக்குனராக அறிமுகமானார்.

முதல் படமே காமெடி கலந்த படமாக இருந்ததால் அப்பொழுது வெளிவந்து வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து கோவா சரோஜா போன்ற காமெடி படங்களை எடுத்து வந்த வெங்கட் பிரபு திடீரென அஜித்தை வைத்து மங்காத்தா என்னும் ஆக்ஷன் படத்தை எடுத்தார்.

மூன்று வேடங்களில் நடித்து ரசிகர்களுக்கு செம்ம தினி போட்ட 5 நடிகர்கள்.. அலெக்ஸ் பாண்டியன்னாக மிரட்டிய சூப்பர் ஸ்டார்

இந்த படம் அதிரடி ஆக்சன் மற்றும் திரில்லர் கலந்த படமாக இருந்ததால் அப்பொழுது வெளியாகி மிகப்பெரிய வசூலை அள்ளியது. அதனைத் தொடர்ந்து மாநாடு, இப்போ தளபதி விஜயை வைத்து GOAT தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தை எடுத்து வருகிறார்.

விஜய் உடன் இணைந்து லைலா, சினேகா, மைக் மோகன், பிரபு, பிரசாந்த் என பலர் நடிக்கின்றனர் இவர்களை தவிர யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் பல முன்னணி பிரபலங்கள் நடிக்கின்றனர் இதனால் GOAT படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

தலை தூக்கவே விட மாட்டாங்க போல.. விஜய்யின் “GOAT” படத்திற்கு வந்த புது சிக்கல்!

இப்படி இருக்கின்ற நிலையில் GOAT படத்திற்கு இயக்குனர் வெங்கட் பிரபு வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் இந்த படத்தை இயக்க வெங்கட் பிரபு சுமார் 10 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.