மூன்று வேடங்களில் நடித்து ரசிகர்களுக்கு செம்ம தினி போட்ட 5 நடிகர்கள்.. அலெக்ஸ் பாண்டியன்னாக மிரட்டிய சூப்பர் ஸ்டார்

சினிமா உலகில் ஹீரோக்கள் படத்தின் கதைக்காக பல்வேறு விதமான கெட்டப்புகளில் நடிக்கின்றனர் அப்படி ஒரு படத்தில் மூன்று கெட்டப்புகளில் நடித்து பின்னி படலெடுத்த 5 நடிகர்களை பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

அபூர்வ சகோதரர்கள் : 1989 ஆம் ஆண்டு சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் அப்பொழுது வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது படத்தில் கமல் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்து தனது முழு திறமையையும் வெளிப்படுத்துகிறார் அவருடன் இணைந்து நாகேஷ், கௌதமி, ஜெய்சங்கர் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சப்போட்டாக இருந்தனர்.

தலை தூக்கவே விட மாட்டாங்க போல.. விஜய்யின் “GOAT” படத்திற்கு வந்த புது சிக்கல்!

மூன்று முகம் :  ஏ ஜெகநாதன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மூன்று முகம் படத்தில் ரஜினி மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்திருப்பார் குறிப்பாக இந்த படத்தில் ரஜினி பேசும் பஞ்ச் டயலாக் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் காட்டு தீ போல பரவியது. ராதிகா சரத்குமார் சில்க் ஸ்மிதா, தேங்காய் சீனிவாசன், டெல்லி கணேஷ் போன்ற பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர் படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

வரலாறு : கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்து பட்டையை கிளப்பிய திரைப்படம் வரலாறு இந்த படத்தில் அஜித் அப்பா இரண்டு மகன்கள் என மூன்று கதாபாத்திரங்களில் நடித்து பின்னி பெடல் எடுத்தார் காலங்கள் கடந்த பிறகும் இந்த படத்தை பற்றிய பேச்சுக்கள் அதிகமாக இருந்து வருகின்றன.

கேப்டன் மில்லர் படத்தில் நடிப்பதற்காக அதிக சம்பளம் வாங்கிய 5 பிரபலங்கள்.!

மெர்சல் : விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படம் மெர்சல் இந்த படத்தில் விஜய் 3 விதமான வேடங்களில் நடித்திருப்பார் இதுவே அவருக்கு முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால், வடிவேலு, எஸ் ஜே சூர்யா என பலர் நடித்தனர்.