இந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்த ஹீரோயின்.. நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய வாரிசு நடிகை.!

Nayanthara : 2023 -ல் பல திரைப்படங்கள் வெளிவந்தது அதில் பல படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று இருப்பதை நாம் பார்த்தோம்.. அதுபோல 2023ல் அதிக படங்களில் நடித்த நடிகைகளை பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

வரலட்சுமி சரத்குமார் : சரத்குமாரின் மகளான இவர் தமிழில் இந்த வருடத்தில் மட்டும் வீ3, கன்னி தீவு, கொன்றால் பாவம், மாருதி நகர், போலீஸ் ஸ்டேஷன் என தமிழில் நான்கு படங்கள் நடித்துள்ளார் தெலுங்கில் வீரசிம்ஹா ரெட்டி, மைக்கேல், ஏஜென்ட், கோட்டபொம்மாளி நான்கு படங்கள் மொத்தமும் சேர்த்து 8 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

ஆளவந்தான் படத்தில் கமலுக்கு டூப் போட்டது இவர்தான்.. 22 வருடங்கள் கழித்து வெளியான ரகசியம்

மகிமா நம்பியார்  : இவர் பெரிய நடிகை இல்லை என்றாலும் இந்த வருடத்தில் ஆரம்பத்தில் இரண்டு படங்கள் நடித்து வெளியானது கடைசி மூன்று மாதத்தில் மட்டும் நான்கு படங்கள் அடுத்தடுத்து வெளியாகி உள்ளன.

ஸ்ருதிஹாசன்  : கமலஹாசனின்  மூத்த மகளான இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நல்ல மார்க்கெட் வைத்திருக்கிறார். வருடத்திற்கு குறைந்தது 4, 5 படங்களில் நடித்து விடுகிறார் அந்த வகையில் 2023 – ல் 4 படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தது.

சிரிப்பால் ரசிகர்களை கொள்ளையடித்த நடிகர் போண்டாமணி மறைவு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா : தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாரா கடைசியாக நடித்த அன்னபூரணி, ஜவான் போன்ற படங்கள் மட்டுமில்லாமல் மேலும் ஒரு படத்தில் அவர் நடித்திருந்தார் மொத்தம் 3 படங்களில் அவர் நடித்துள்ளார்.

த்ரிஷா : மாடல் அழகியாக இருந்து பின் சினிமாவில் கொடி கட்டி பறந்து வரும் திரிஷா இந்த ஆண்டு நல்ல நல்ல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் இவர் மொத்தம் மூன்று படங்களில் நடித்திருக்கிறார்.

சமந்தா : ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் சமந்தா இந்த வருடத்தில் மொத்தம் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.