விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் கையில் குத்தி இருக்கும் டாட்டூவை கவனித்தீர்களா.?

Sanmuga Pandian : விஜயகாந்த் திரை உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர்களை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல்  பேரையும், புகழையும் சம்பாதித்தார். இப்படிப்பட்ட விஜயகாந்த் நிஜத்தில் நேர்மையான எண்ணம் கொண்டவராகவும் இருந்தார்.

தன்னை தேடி வரும் பலருக்கும் காசு மற்றும் சாப்பாட்டை போட்டு அழகு பார்த்தார். இதனாலையே விஜயகாந்தை பலரும் கேப்டன், கருப்பு எம்ஜிஆர் என சொல்லி வந்தனர். திடீரென அரசியலில் முழு கவனம் செலுத்தினார் முதலில் எம்.எல்.ஏ வாக அரியணை ஏறினார் அடுத்து எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றார்.

The Greatest of all times : Thalapathy 68 டைட்டிலுடன் வெளியாகிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ..! இதுதான் புத்தாண்டு ஸ்பெஷல்..

அடுத்த சிஎம் இவர் தான் என பலரும் கூறிவந்த நிலையில் உடல் ஒத்துழைக்காததால் ஓய்வு எடுத்து வந்த நிலையில் கடந்த 28 ஆம் தேதி உடல் நல குறைவு காரணமாக இயற்கை எய்தினார். இப்படியான நிலையில் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் தனது கையில் குத்தி இருக்கும் டாட்டூ குறித்து தற்பொழுது வைரலாகி வருகிறது.

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். சகாப்தம் படத்தின் மூலம் கதாநாயகனாக திரை உலகிற்கு அறிமுகமானார். அடுத்து ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட உலக்கு என்ற திரைப்படத்தில் நடித்தார் இப்போ தமிழன் என்று சொல் படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடந்தது.

கேப்டன் இறந்து ஒரு வாரம் கூட ஆகல அதற்குள் ‘தளபதி 68’ பட அப்டேட்டா.!

இந்த நிலையில் சண்முக பாண்டியன் தனது கையில் ஒரு டாட்டூ குத்தி உள்ளார் அந்த டாட்டூ வேறு எதுவும் அல்ல தனது அப்பா விஜயகாந்தின் கண்களை தான் பச்சை குத்தி இருக்கிறார். அதன் புகைப்படம் தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

 

Sanguma Pandian
Sanguma Pandian
Vijayakanth
Vijayakanth